கண்டிப்பா அவர்கிட்ட பேசிட்டு தான் தோனி அந்த முடிவை எடுத்திருப்பாரரு – சி.எஸ்.கே கோச் பிளமிங் கருத்து

Fleming
- Advertisement -

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு கடைசி சீசனாக பார்க்கப்படும் வேளையில் தோனி இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக நேற்று கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் சென்னை அணியின் புதிய கேப்டனாக இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த சீசன் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே “புதிய சீசன், புதிய ரோல்” என்று தோனி பதிவிட்டு இருந்த வேளையில் தற்போது அவர் கேப்டன் பதிவிலிருந்து விலகியது பலரது மத்தியிலும் பேசு பொருளாக மாறியுள்ளது.

- Advertisement -

மார்ச் 22-ஆம் தேதி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த நடப்பு ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றனர். இந்த தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்க இரு அணிகளுமே தீவிரமாக தயாராக வருகிறது.

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் மாற்றம் குறித்தும், தோனியின் இந்த முடிவு குறித்தும் பேசியுள்ள சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில் : சி.எஸ்.கே அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே தோனி இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் நடத்தப்பட்ட கேப்டன்சி குறித்த பயிற்சி வகுப்புகளில் ருதுராஜ் சிறப்பாக செயல்பட்டார்.

- Advertisement -

எனவே புதிய கேப்டனாக அவரை நியமனம் செய்ய இதுவே சரியான நேரம் என்று தோனி கருதி இருக்கிறார். அந்த அடிப்படையில் தான் அவர் இந்த முடிவை எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். மேலும் தோனி நிச்சயமாக இந்த கேப்டன்சி மாற்றம் குறித்த முடிவுகளை ருதுராஜிடம் கலந்து ஆலோசித்து இருப்பார். மேலும் ருதுராஜிடம் இந்த விவகாரங்கள் குறித்த தெளிவான ஆலோசனைகளையும் வழங்கி இருப்பார்.

இதையும் படிங்க : இப்போவே சி.எஸ்.கே அணி 20% வொர்ஸ்ட்டாயிடுச்சி.. அவர் இல்லாம எப்படி? – மைக்கல் வாகன் கருத்து

எனவே ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்படுவதில் எங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. தோனி, ஜடேஜா போன்ற மூத்த வீரர்களின் ஆலோசனையை பெற்று அவர் களத்தில் சிறப்பாக செய்வார் என்று நம்புகிறோம். அதில் அவருக்கு எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை என்று பிளமிங் கூறியுள்ளார். ஏற்கனவே கடந்த 2022-ஆம் ஆண்டு ஜடேஜா சி.எஸ்.கே அணியின் கேப்டனாக மாற்றப்பட்ட வேளையில் சி.எஸ்.கே பெரிய சரிவை சந்தித்து பின்னர் மீண்டும் தோனி கேப்டன்சி பொறுப்பு ஏற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement