இப்போவே சி.எஸ்.கே அணி 20% வொர்ஸ்ட்டாயிடுச்சி.. அவர் இல்லாம எப்படி? – மைக்கல் வாகன் கருத்து

Vaughan
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இன்று மார்ச் 22-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக துவங்க இருக்கிறது. ஏற்கனவே இந்த தொடருக்கான அறிவிப்பு வெளியானதில் இருந்து பல்வேறு பரபரப்பான புதிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே குஜராத் அணியிடமிருந்து ஹார்டிக் பாண்டியா மும்பை அணிக்கு மாறியது மட்டுமின்றி கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார்.

அதேபோன்று சாம்பியன் கேப்டன் ரோகித் சர்மா கேப்டன் பதிவியிலிருந்து நீங்கி சாதாரண வீரராக விளையாட இருக்கிறார். மேலும் 20 கோடிக்கு மேல் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் ஏலம் போனது, சுப்மன் கில் குஜராத் அணிக்கு புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

ரிஷப் பண்ட் டெல்லி அணிக்காக மீண்டும் களம் காண இருப்பது என ஏகப்பட்ட மாற்றங்கள் இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னர் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் நேற்று வெளியான அறிவிப்பின்படி : சென்னை அணியின் கேப்டன் தோனி தனது பதிவியிலிருந்து விலகி புதிய கேப்டனாக இளம்வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு அந்த வாய்ப்பினை வழங்கியுள்ளார்.

இதன் காரணமாக இந்த ஆண்டு சிஎஸ்கே அணி ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் களமிறங்க உள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும், விமர்சகர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கல் வாகன் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் சென்னை அணியின் இந்த முடிவு குறித்து சில கருத்துக்களை பகிர்ந்து உள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் : எம்.எஸ் தோனி கேப்டனாக இல்லை என்பது சென்னை அணிக்கு இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே 20% பின்னடைவை கொடுத்துள்ளது. தோனி கேப்டனாக இல்லாதது நிச்சயம் சென்னை அணிக்கு ஒரு பலவீனம் தான் என்று பதவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : தல தோனியின் இடத்தை நிரப்ப முடியுமா? கேப்டனாக ருதுராஜ் பெற்ற வெற்றிகள் மற்றும் வரலாறு இதோ

அவரது இந்த கருத்தினை போன்று ரசிகர்கள் சிலரும் ஜடேஜா ஏற்கனவே இதேபோன்று கேப்டனாக அறிவிக்கப்பட்ட வேளையில் சென்னை அணி பின்னடைவை சந்தித்த போன்று இம்முறையும் சென்னை அணி சறுக்கலை சந்திக்க வாய்ப்புள்ளதாக தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement