இந்தியாவுக்காக நான் விளையாட யுவி சொன்ன அந்த வார்த்தைகள் தான் காரணம்.. ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி

Sreesanth 8
- Advertisement -

நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் டிசம்பர் 12ஆம் தேதி தம்முடைய 42வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 2007 டி20 உலகக் கோப்பையில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து 12 பந்தில் 50 ரன்கள் கடந்து காலத்தால் அழிக்க முடியாத உலக சாதனைகளை படைத்த அவர் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதை விட 2011 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் இந்தியா 28 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.

குறிப்பாக அந்த உலகக் கோப்பையில் உடல்நலத்தை பற்றி கவலைப்படாமல் தேசத்திற்காக விளையாடி அவர் புற்றுநோயிலிருந்தும் போராடி குணமடைந்து பலருக்கும் ரோல் மாடலாக திகழ்கிறார். அந்த வகையில் இந்தியாவின் உலகக் கோப்பை நாயகனுக்கு ஏராளமான ரசிகர்களும் முன்னாள் இந்நாள் வீரர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

யுவியின் உத்வேகம்:
இந்நிலையில் ஆரம்ப காலங்களில் பார்ட்டியில் ஈடுபட்டு பொறுப்பின்றி இருந்த தம்மிடம் யுவராஜ் கொடுத்த உத்வேகமான வார்த்தைகளும் ஆலோசனைகளும் தான் இந்தியாவுக்காக விளையாடுவதற்கு உதவியதாக ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒரு முறை பெங்களூருவில் நடைபெற்ற கேஎஸ்சிஏ கோப்பையில் நான் விளையாடினேன். அதில் நான் இந்தியன் ஏர்லைன்ஸ் அணிக்காக விளையாடினேன். அது ஃபைனல் என்பதால் யுவராஜ் மற்றும் லக்ஷ்மண் பாய் ஆகியோரும் விளையாடினார்கள்”

“அப்போட்டியில் ஸ்லிப் பகுதியில் இருந்து யுவராஜ் என்னுடைய பவுலிங்கை பார்த்தார். 2003 காலகட்டத்தில் நடைபெற்ற அந்த போட்டியை முடித்து விட்டு உடைமாற்றும் அறையில் நான் அணிந்திருந்த ஸ்பைக்குகளை கழற்றிக் கொண்டிருந்தேன். அப்போது அதை பார்த்த யுவராஜ் பாய் என்னிடம் ஸ்ரீசாந்த் முதலில் நீ பார்ட்டிக்கு செல்வதை நிறுத்தி விட்டு கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தினால் இந்தியாவுக்காக விளையாட முடியும் என்று சொன்னார்”

- Advertisement -

“குறிப்பாக முதல் தர கிரிக்கெட்டில் இதே போல ஓய்வெடுக்காமல் விளையாடினால் அடுத்த 2 – 3 வருடங்களில் உன்னால் இந்தியாவுக்கு விளையாட முடியும் என்று அவர் சொன்னார். யுவராஜ் போன்ற ஒரு நட்சத்திர வீரர் 19 – 20 வயதில் இருந்த என்னிடம் அப்போது அப்படி சொல்ல வேண்டிய அவசியமில்லை”

இதையும் படிங்க: பதவிக்கு யார் வந்தாலும் அடிக்கடி மாற்றம் செஞ்சா.. ஜெயிக்க முடியாது.. ஜஹீர் கான் கருத்து

“ஆனால் என்னால் இந்தியாவுக்கு விளையாட முடியும் என்ற நம்பிக்கை வார்த்தைகளை அவர் எனக்கு சொன்னார். அதன் பின் அவருடன் இணைந்து 2007 டி20 உலகக் கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் வென்ற டெஸ்ட் தொடர் போன்ற வெற்றிகளில் அங்கமாக இருந்தது மறக்க முடியாத நினைவுகளாக அமைந்தது” என்று கூறினார்.

Advertisement