கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற ஹர்பஜனுக்கு வாழ்த்துக்கூறிய ஸ்ரீசாந்த் – என்ன சொல்லியிருக்காரு பாருங்க

Sreesanth
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான ஹர்பஜன் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 350 போட்டிகளுக்கு மேல் விளையாடி அனுபவம் கொண்டவர். 41 வயதான ஹர்பஜன்சிங் கடந்த 2015-ஆம் ஆண்டில் இருந்து இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த நிலையில் இன்று தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக விளையாடாமல் இருந்தாலும் ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக விளையாடி வந்த ஹர்பஜன் நீண்ட யோசனைக்கு பிறகு இந்த முடிவினை எடுத்துள்ளார்.

இனி வரும் ஐபிஎல் தொடர்களில் தனக்கு இடம் கிடைக்காது என்பதை உணர்ந்த வேளையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வாயிலாக தனது ஓய்வு அறிவிப்பினை ஹர்பஜன் சிங் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். தற்போது இவரது இந்த ஓய்வு அறிவிப்புக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இவ்வேளையில் இந்திய அணியில் அவருடன் விளையாடிய சக வீரரான ஸ்ரீசாந்த் அவருக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஏற்கனவே 2008ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட மோதலில் ஸ்ரீசாந்தை ஹர்பஜன் கண்ணத்தில் அரைந்தபோது அந்த விவகாரம் பெரிய சர்ச்சையாக வெடித்தது. அதன் பின்னர் அவர்கள் இருவரும் சகஜமாக பேசிக் கொண்டாலும் அவர்கள் இருவரைப் பற்றி யோசித்தாலே அந்த அரை தான் அனைவரது ஞாபகத்திற்கும் வரும்.

இந்நிலையில் ஹர்பஜன் சிங்கின் ஓய்வுக்குப் பிறகு தனது வாழ்த்துக்களை தெரிவித்த ஸ்ரீசாந்த் ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக குறிப்பிட்டதாவது : இந்திய அணிக்கு மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டிலும் நீங்கள் ஒரு முக்கியமான வீரர். உங்களுடன் நான் இணைந்து விளையாடியது மிகவும் பெருமையான விடயம். எப்பொழுதுமே உங்களது அரவணைப்பு எனது ஞாபகத்தில் இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : என்ன நடந்தாலும் இவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவார். உறுதியளித்த – இந்திய து.கேப்டன்

மேலும் உங்கள் மீது மிகப்பெரும் மரியாதை மற்றும் அன்பு எப்போதும் என்னிடம் உள்ளது என தனது வாழ்த்தை அவர் பகிர்ந்துள்ளார். அவரது இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement