திமிர் புடிச்சு நீங்க சுப்ரீம் கோர்ட்டை விட பெரியாளா? கம்பீரை வெளுத்த ஸ்ரீசாந்த்.. புதிய பதிவு

Sreesanth 44
- Advertisement -

ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடி வரும் லெஜெண்ட்ஸ் லீக் 2023 கிரிக்கெட் தொடரில் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் முன்னாள் இந்திய வீரர்கள் கௌதம் கம்பீர் மற்றும் ஸ்ரீசாந்த் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டுக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த போட்டியில் ஸ்ரீசாந்த் வீசிய பந்துகளில் கம்பீர் பவுண்டரிகளை விளாசி அதிரடியாக விளையாடினார்.

அதனால் கடுப்பான ஸ்ரீசாந்த் பெரும்பாலான பவுலர்களை போல கம்பீரை பார்த்து முறைத்ததாக தெரிகிறது. மறுபுறம் சாதாரணமாகவே விராட் கோலியுடன் சண்டை போடும் அளவுக்கு கோபக்காரரான கௌதம் கம்பீர் அதற்கு அசராமல் உடனடியாக ஸ்ரீசாந்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து நடுவர்கள் உள்ளே புகுந்து மேற்கொண்டு கைகலப்பு ஏற்படாமல் தடுத்து நிறுத்தினார்கள்.

- Advertisement -

ஸ்ரீசாந்த் பதிலடி:
இறுதியில் சொல்லக்கூடாத சில வார்த்தைகளை பயன்படுத்தி கௌதம் கம்பீர் தம்மை திட்டியதாக தெரிவித்த ஸ்ரீசாந்த் இதனாலேயே விராட் கோலி, சேவாக் போன்ற உங்களுடைய சொந்த மாநிலத்தைச் சேர்ந்த வீரர்கள் கூட உங்களை மதிப்பதில்லை என விமர்சித்தார். அது போக கௌதம் கம்பீர் தம்மை ஃபிக்ஸர் என்று சில மோசமான கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியதாகவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீசாந்த் வீடியோ போட்டு மற்றுமொரு விமர்சனத்தை வெளியிட்டார்.

அதற்கு “இந்த உலகம் முழுவதும் கவனம் செலுத்தும் போது புன்னகைக்கவும்” என்று 2007 டி20 உலகக் கோப்பையில் சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கௌதம் கம்பீர் அவருக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்தார். அந்த பதிவின் கீழ் 2013 ஐபிஎல் சூதாட்ட வழக்கில் தாம் நிரபராதி என்று நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அவமதிக்கும் வகையில் எப்படி நீங்கள் என்னை ஃபிக்ஸர் என்று சொல்லலாம் என மீண்டும் கெளதம் கம்பீருக்கு கமெண்ட் போட்டு ஸ்ரீசாந்த் பதிலடி கொடுத்துள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“விளையாட்டு வீரர்களுக்கான எல்லையை நீங்கள் கடந்து விட்டீர்கள் பிரதர். இவை அனைத்தையும் விட நீங்கள் மக்களின் பிரதிநிதியாக இருக்கிறீர்கள். ஆனாலும் நீங்கள் கிரிக்கெட்டர்களிடம் சண்டையிடுகிறீர்கள். இதற்கான காரணம் என்ன? நான் உங்களைப் பார்த்து சிரித்ததற்காக நீங்கள் என்னை ஃபிக்ஸர் என்று சொன்னீர்கள்? நீங்கள் உச்சநீதிமன்றமா? இது போல் மற்றவரைப் பற்றி விரும்பியதை பேசுவதற்கு உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது”

இதையும் படிங்க: உலகமே புகழுக்கு அலையுது.. ஸ்ரீசாந்த் விவகாரத்தில் கம்பீர் மறைமுக பதிலடி.. இர்பான் பதான் ஆதரவு

“சொல்லப்போனால் அந்த சமயத்தில் நீங்கள் நடுவர்களை கூட மோசமாக திட்டினீர்கள். ஆனாலும் இப்போது நீங்கள் சிரிப்பை பற்றி பேசுகிறீர்கள். நீங்கள் ஒரு திமிர் பிடித்த வர்க்கமற்ற நபர். உங்களுக்கு ஆதரவளித்தவர்களுக்கு எவ்வித மரியாதையும் இல்லை. ஒரு முறை அல்ல 7 – 8 முறை என்னை ஃபிக்ஸர் என்று சொன்ன உங்கள் மீது நேற்றுடன் வைத்திருந்த அனைத்து மரியாதையும் போய்விட்டது. கடவுள் உங்களை மன்னிக்க மாட்டார். இதன் பின் நீங்கள் களத்திற்கு வர மாட்டீர்கள். கடவுள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

Advertisement