கழற்றி விட்ட ராஜஸ்தானுக்கு இதை செஞ்சு கேப்டனான ரியான்.. அவங்களுக்கு எடுத்துகாட்டு.. ஸ்ரீசாந்த் பாராட்டு

Sreesanth
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்குகிறது. அந்தத் தொடரில் முதல் 3 போட்டிகளில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சனுக்கு பதில் ரியான் பராக் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அவர் 2019 முதல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார்.

அந்த வாய்ப்பில் முதல் 4 வருடங்களில் மிகவும் தடுமாற்றமாக விளையாடிய ரியான் பராக் ட்விட்டர் பக்கத்தில் விராட் கோலி போல செயல்படுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். அதனால் ரசிகர்கள் அவரை கடுமையாக கிண்டலடித்து விமர்சித்து வந்தனர். அதே போல கொடுத்த வாய்ப்புகளில் சுமாராக விளையாடியதால் பொறுமையிழந்த ராஜஸ்தான் நிர்வாகமும் 2023 சீசனில் அவரை அதிரடியாக பிளேயிங் லெவனிலிருந்து நீக்கியது.

- Advertisement -

கழற்றி விடப்பட்ட ரியான்:

அதன் காரணமாக பொறுப்பை உணர்ந்த ரியான் பராக் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி பெரிய ரன்கள் குவித்தார். அப்படியே 2024 ஐபிஎல் தொடரில் 573 ரன்களை 52.09 என்ற நல்ல சராசரியில் குவித்த அவர் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் 3வது இடத்தை பிடித்தார். அதன் காரணமாக தற்போது காயமடைந்துள்ள சாம்சனுக்கு பதில் முதல் 3 போட்டிகளில் ராஜஸ்தானை வழி நடத்தும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில் ஒரு கட்டத்தில் தம்மை கழற்றி விட்ட ராஜஸ்தான் அணிக்கே ரியான் பராக் தற்போது கேப்டனாக முன்னேறி அசத்தியுள்ளதாக ஸ்ரீசாந்த் பாராட்டியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ரியான் பராக்கை நான் அதிகம் பார்த்ததில்லை. ஆனால் உள்ளூரில் கேரளாவுக்கு எதிராக அவர் ஒரு போட்டியில் தனது மாநில அணியை நன்றாக வழி நடத்தினார்”

- Advertisement -

இன்று கேப்டன்:

“உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அசத்திய அவருக்கு சஞ்சு சாம்சன் விளையாடாவிட்டாலும் களத்திற்கு வெளியே உதவி செய்வார். ரியான் பராக் தலைமைத் தாங்குவதால் ராஜஸ்தான் அணியில் பெரிய மாற்றத்தை நான் பார்க்கப்போவதில்லை. கடந்த வருடம் அவர் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் ஒருவராக இருந்தார்”

இதையும் படிங்க: இந்த வருஷம் ஜாஸ் பட்லருக்கு இதான் நாங்க குடுக்கும் ரோல் – குஜராத் கேப்டன் சுப்மன் கில் பேட்டி

“ராஜஸ்தான் அணியில் கழற்றி விடப்படும் சூழ்நிலை இருந்த அவர் 500 ரன்கள் அடித்து கம்பேக் கொடுத்தார். அந்த நல்ல செயல்பாடுகளால் தற்போது அவருக்கு கேப்டன்ஷிப் கிடைத்துள்ளது. இது ஐபிஎல் தொடரை பார்க்கும் அனைத்து இளைஞர்களுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும். நீங்கள் எந்த வயதில் எங்கிருந்து வந்தாலும் பிரச்சனையில்லை. நீங்கள் தடைகளைத் தாண்டி கம்பேக் கொடுத்து தொடர்ச்சியாக அசத்தும் போது உங்களுக்கான வாய்ப்புகள் வரும். அந்த வகையில் ஐபிஎல் கேப்டனாகியுள்ள ரியான் பராக்கிற்கு எனது வாழ்த்துக்கள்” எனக் கூறினார்.

Advertisement