போட்டிக்கு முன்னர் ஸ்டம்பின் மீது பேட் மற்றும் தொப்பியை வைத்து வணங்கிய வீரர்கள் – காரணம் இதுதான்

dean
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி மைதானத்தில் 26ஆம் தேதி இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.

jones

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி துவங்குவதற்கு முன்பாக மெல்போர்ன் மைதானத்தில் இருந்த ஸ்டம்பிற்கு அருகில் ஒரு பேட் மற்றும் தொப்பி, கூலிங்கிளாஸ ஆகியவைகளை வைத்து மரியாதை செய்யப்பட்டு பின்னர் போட்டி ஆரம்பித்தது. இதற்கு காரணம் யாதெனில் மெல்போர்ன் மைதானத்தில் மிகவும் பிரியப்பட்டு விளையாடும் டீன் ஜோன்ஸ்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நிகழ்வு அரங்கேறியது.

அவரது தொப்பி மற்றும் அவர் விளையாடிய பேட், கண்ணாடி போன்றவற்றை மெல்போர்ன் மைதானத்தில் வைத்து அவரது மனைவியும், மகள்களும் இந்த செயலினை செய்தனர். அப்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் அவர்களுடன் இருந்தார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவானான டீன் ஜோன்ஸ் கடந்த செப்டம்பர் மாதம் ஐபிஎல் தொடரில் வர்ணனையை செய்வதற்காக இந்தியா வந்திருந்தார்.

Jones

அப்போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்த அவருக்கு இந்த மரியாதையை இன்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் செய்தது. டீன் ஜோன்ஸ் ஒரு கிரிக்கெட் பயிற்சியாளராக, வர்ணனையாளராக, கிரிக்கெட் வீரராக பன்முகத்திறமை கொண்டவர். அவரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தற்போது மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்த அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 9699 ரன்களைக் குவித்துள்ளார் ஜோன்ஸ். இவருக்காகவே இந்த அஞ்சலி செலுத்தப்பட்டு இரு அணி வீரர்களும் அதன் பின்னர் போட்டியை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement