27 வருடம்.. ஆஸியை சாய்த்த தெ.ஆ.. சோக்கர் பட்டத்தை உடைத்து டெஸ்ட் சாம்பியனாக சரித்திர சாதனை வெற்றி

RSA Champion 2025
- Advertisement -

ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 11ஆம் இங்கிலாந்தில் உள்ள லண்டனில் இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 212 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 66, வெப்ஸ்டர் 72 ரன்கள் எடுத்தார்கள்.

தென்னாபிரிக்கா அணிக்கு அதிகபட்சமாக ரபாடா 5 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவை மிகச்சிறப்பாக பௌலிங் செய்த ஆஸ்திரேலியா வெறும் 138 ரன்களுக்கு சுருட்டி வீசி 74 ரன்கள் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக டேவிட் பேடிங்கம் 45, கேப்டன் பவுமா 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா அசத்தல்:

அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியாவை மிகச்சிறப்பாக பௌலிங் தென் ஆப்பிரிக்கா 207 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. ஆஸ்திரேலிய அணிக்கு முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 58*, அலெக்ஸ் கேரி 43 ரன்கள் எடுத்தனர். தென்னாபிரிக்கா அணிக்கு அதிகபட்சமாக ரபாடா 4, லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகள் எடுத்தனர்

இறுதியில் 282 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு துவக்க வீரர் ஐடன் மார்க்ரம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எதிர்புறம் ரியன் ரிக்கல்ட்டன் 6, வியான் முல்தர் 27 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். ஆனால் இந்தப் பக்கம் தொடர்ந்து அசத்திய மார்க்ரம் அரை சதத்தை அடித்து அசத்தினார். எதிர்ப்புறம் வந்த கேப்டன் பவுமா 2 ரன்னில் கொடுத்த கேட்சை ஆஸ்திரேலிய தவற விட்டதைப் பயன்படுத்தி அரை சதத்தை அடித்தார்.

- Advertisement -

சரித்திர வெற்றி:

3வது விக்கெட்டுக்கு 147 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தென்னாப்பிரிக்காவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்த அந்த ஜோடியில் பவுமா 66 ரன்னில் அவுட்டானார். அவருக்கு அடுத்ததாக வந்த ஸ்டப்ஸ் 8 ரன்னில் அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய மார்க்ரம் ஐசிசி ஃபைனலில் சதத்தை அடித்த முதல் தென்னாபிரிக்க வீரராக சாதனை படைத்து 136 (207) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார்.

இதையும் படிங்க: பண்ணி ஹோப் கேட்ச் பிடிக்க தடை விதித்த எம்சிசி.. சூரியகுமார் கேட்ச்கள் செல்லுமா? வெளியான புதிய ரூல்ஸ்

இறுதியில் கெய்ல் வேரின் 7*, பேடிங்கம் 21* ரன்கள் எடுத்ததால் 285/5 ரன்களை எடுத்த தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வென்று தென்னாபிரிக்கா சாதனை படைத்தது. அதை விட 1998 நாக் அவுட் டிராபிக்கு பின் 27 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்கா முதல் முறையாக ஐசிசி கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதனால் சோக்கர் என்று கிண்டல் செய்து விமர்சித்தவர்களுக்கு தென்னாப்பிரிக்கா பதிலடி கொடுத்து சாம்பியனாக சாதனை படைத்துள்ளது. மறுபுறம் ஸ்டார்க் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை கோட்டை விட்டது.

Advertisement