பண்ணி ஹோப் கேட்ச் பிடிக்க தடை விதித்த எம்சிசி.. சூரியகுமார் கேட்ச்கள் செல்லுமா? வெளியான புதிய ரூல்ஸ்

Catch Rule
- Advertisement -

அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் வெற்றி பெறுவதற்கு கேட்ச்களை பிடிப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கேட்ச்சஸ் வின் மேட்ச்சஸ் என்று ஆங்கிலத்தில் சொல்லும் அளவிற்கு கேட்ச்களை பிடிப்பது வெற்றியில் முக்கிய பங்காற்றும். ஆரம்ப காலங்களில் சாதாரணமாக கேட்ச் பிடிப்பது வழக்கமானதாக இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஃபீல்டிங் துறையில் ஏற்பட்ட பயிற்சிகள் மற்றும் முன்னேற்றம் காரணமாக இப்போதெல்லாம் பல அற்புதமான கேட்ச்கள் அசால்ட்டாக பிடிக்கப்படுகின்றன.

அதிலும் ஐபிஎல் போன்ற டி20 கிரிக்கெட்டின் வருகையால் ஃபீல்டிங் துறை மிகப்பெரிய முன்னேற்றத்தை சந்தித்துள்ளது. அதன் காரணமாக பவுண்டரி எல்லையில் பலமுறை ஃபீல்டர்கள் சிக்சரை தடுத்து தங்களுடைய அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்கின்றனர். இந்நிலையில் பௌண்டரி எல்லையில் பிடிக்கும் ஒரு விதமான கேட்ச்சுக்கு கிரிக்கெட் விதிமுறைகளை வகுக்கும் எம்சிசி அமைப்பு தடை விதித்துள்ளது.

- Advertisement -

பண்ணி ஹோப் கேட்ச்:

அதாவது பௌண்டரி எல்லையில் நிற்கும் வீரர்கள் சிக்ஸர் செல்லும் பந்துகளை தாவிப் பிடிப்பது வழக்கமாகும். அவ்வாறு பிடிக்கும் போது தங்களுடைய பேலன்ஸை இழக்கப்போகிறோம் என்பதை உணரும் அவர்கள் பந்தை காற்றில் தூக்கி போடுவார்கள். பின்னர் பௌண்டரி எல்லைக்குள் சென்று விட்டு மீண்டும் வந்து பந்தை பிடித்து கேட்ச் பிடிப்பார்கள்.

எடுத்துக்காட்டாக 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய சூரியகுமார் யாதவ் கேட்ச்சை சொல்லலாம். ஆனால் சில நேரங்களில் பந்தை காற்றில் தூக்கிப் போடும் வீரர்கள் பௌண்டரி எல்லைக்குள் சென்று விட்டு, தங்களுடைய காலை தூக்கியவாறு பந்தை கையில் பிடித்து விட்டு மீண்டும் காற்றில் தூக்கி போட்டுவிட்டு களத்திற்குள் வந்து கேட்ச் பிடிப்பார்கள்.

- Advertisement -

தடை வித்த எம்சிசி:

எடுத்துகாட்டாக 2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வீரர் தேவால்ட் ப்ரேவிஸ் பிடித்த கேட்ச்சை சொல்லலாம். இந்நிலையில் “பண்ணி ஹோப்” என்ற பெயரில் அழைக்கப்படும் அந்த வகையான கேட்ச்கள் இனிமேல் ஏற்கப்படாது என எம்சிசி அறிவித்துள்ளது. இந்த மாற்றத்தை வரும் மாதத்திலிருந்து செய்யுமாறு ஐசிசிக்கு எம்சிசி நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது.

இதையும் படிங்க: விராட் கோலியை இந்தியா மிஸ் செய்யாது.. இங்க அதை விட யாரும் பெருசில்ல.. அஸ்வின் வெளிப்படை

19.5.2 கேட்ச் பிடிப்பதற்கான விதிமுறையில் எம்சிசி செய்துள்ள மாற்றம் பின்வருமாறு. “எல்லைக்கு வெளியே சென்ற எந்த ஒரு ஃபீல்டரும் காற்றில் பறக்கும் போது பந்தை ஒரு முறை மட்டுமே தொட வேண்டும். அவ்வாறு செய்த பின் அந்த பந்து வீச்சின் மீதமுள்ள நேரத்திற்கு ஃபீல்டர் களத்தின் எல்லைக்குள் முழுமையாக தரையிறங்க வேண்டும் என்பதே எங்களுடைய தீர்வாகும்” என்று கூறியுள்ளது. இதன் படி காற்றில் பந்தை தூக்கிப்போட்டு விட்டு ஒருமுறை மட்டுமே பௌண்டரி எல்லையில் காலை வைத்து கேட்ச் பிடிக்க முடியும்.2 முறை தொட்டால் ரன்கள் வழங்கப்படும். 2 ஃபீல்டர்கள் சேர்ந்து அது போன்ற கேட்ச் பிடிக்கும் போதும் இதே விதிமுறை பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement