விராட் கோலியை இந்தியா மிஸ் செய்யாது.. இங்க அதை விட யாரும் பெருசில்ல.. அஸ்வின் வெளிப்படை

R ashwin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்குகிறது. எனவே இம்முறை இங்கிலாந்து மண்ணில் இந்திய அணியால் வெற்றி பெறுவது கடினமானதாகவே பார்க்கப்படுகிறது.

ஏனெனில் வரலாற்றில் சச்சின் முதல் விராட் கோலி வரை பல ஜாம்பவான்கள் விளையாடியும் இந்திய அணியால் இங்கிலாந்தில் தொடர்ச்சியாக வெற்றி காண முடியவில்லை. குறிப்பாக பேட்டிங் துறையின் முதுகெலுமாக கருதப்படும் விராட் கோலி 2014, 2018, 2021, 2022 ஆகிய வருடங்களில் இங்கிலாந்தில் விளையாடியுள்ளார். அப்படிப்பட்ட அனுபவமிக்க அவர் தற்போது ஓய்வு காரணமாக இங்கிலாந்தில் விளையாடப் போவதில்லை.

- Advertisement -

இந்தியா மிஸ் செய்யாது:

அதனால் இம்முறை விராட் கோலி போன்ற அனுபவமிக்கவர் இல்லாமல் இந்தியா வெற்றி பெறுவது கடினம் என்பது பலருடைய கணிப்பாக இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணி இங்கிலாந்தில் விராட் கோலியை மிஸ் செய்யாது என்று முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். ஏனெனில் இங்கே கிரிக்கெட்டை விட யாரும் பெரியவர் கிடையாது என்று அவர் கூறியுள்ளார்.

அதனால் ஒருவர் செல்லும் போது அந்த இடத்தை மற்றொருவர் நிரப்புவது இயற்கையான விஷயம் என்று அஸ்வின் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கிரிக்கெட்டை விட மிகப்பெரிய ஒருவர் கிரிக்கெட்டில் விளையாடினார் அல்லது விளையாடப் போவதாக எனக்குத் தெரியவில்லை. பூங்காவில் நடப்பவர்கள் அனைவரும் விளையாட்டிற்கு நல்லது செய்வதில்லை”

- Advertisement -

அஸ்வின் கருத்து:

“அவர்களை வைத்து விளையாட்டு தான் நல்லது கெட்டதைச் செய்கிறது. விராட் கோலியை நான் விரும்புகிறேன். ஆனால் விளையாட்டுக்கு விளையாட வந்த அவர் விளையாடி விட்டு விளையாட்டிலிருந்து சென்று விட்டார். இந்த விளையாட்டை அவர் சிறந்த இடத்தில் விட்டுச் சென்றுள்ளார். தற்போது அந்த விளையாட்டை மற்றொருவர் முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: இதே நாளில் 1999 உ.கோ கிப்ஸ் போல.. 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கோட்டை விட்ட ஸ்மித்? ஆச்சர்ய பதிவு

அவர் கூறுவது போல சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற போது மிகப்பெரிய வெற்றிடம் உருவானது. அதை ஓரளவு நிரப்பிய விராட் கோலி மேட்ச் வின்னராக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். தற்போது விராட் கோலியின் ஓய்வால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தில் மற்றொருவர் அசத்துவார் என்பதை உறுதியாக நம்பலாம்.

Advertisement