இதே நாளில் 1999 உ.கோ கிப்ஸ் போல.. 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கோட்டை விட்ட ஸ்மித்? ஆச்சர்ய பதிவு

Steve smith catch
- Advertisement -

ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 212 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவை 138 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா 74 ரன்கள் முன்னிலை பெற்றது. அடுத்ததாக விளையாடிய அந்த அணியை தென்னாப்பிரிக்கா 207 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது.

இறுதியில் 282 ரன்களை துரத்தும் தென்னாப்பிரிக்கா 3வது நாள் முடிவில் 213/2 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 8 விக்கெட்டுகள் கைவசம் வைத்துள்ள அந்த அணிக்கு 69 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. அதனால் இந்தப் போட்டியில் தென்னாபிரிக்கா நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை முதல் முறையாக வெல்வதற்கு பிரகாச வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

1999 உலகக் கோப்பை கேட்ச்:

களத்தில் மார்க்ரம் 102*, கேப்டன் பவுமா 65* ரன்களுடன் உள்ளார்கள். முன்னதாக இந்தப் போட்டியில் சேசிங் செய்து வரும் தென்னாப்பிரிக்காவுக்கு ரிக்கல்டன் 6, வியன் முல்தர் 27 ரன்களில் அவுட்டானார். மறுபுறம் ஐடென் மார்க்ரம் நிதானமாக விளையாடி ரன்களை குவித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த தென்னாப்பிரிக்கா கேப்டன் தெம்பா பவுமா 2 ரன்னில் இருந்த போது பட் கமின்ஸ் வேகத்தில் எட்ஜ் கொடுத்தார்.

அந்த கேட்ச்சை முதல் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் பிடிக்காமல் கோட்டை விட்டார். அந்த கேட்சை பிடிக்க முயற்சித்த போது தரையில் விரல் உரசிதால் காயத்தை சந்தித்த அவர் பாதியிலேயே வெளியேறியது வேறு கதை. மறுபுறம் அதைப் பயன்படுத்திய பவுமா நங்கூரத்தைப் போட்டு ஆஸ்திரேலியாவுக்கு தொல்லையாக மாறினார்.

- Advertisement -

2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப்:

தொடர்ந்து அபாரமாக விளையாடிய அவர் மேற்கொண்டு 63 ரன்கள் குவித்து கிட்டத்தட்ட ஆஸ்திரேலியாவின் வெற்றியை பறித்துள்ளார் என்றே சொல்லலாம். இந்நிலையில் 1999 இதே ஜூன் 14ஆம் தேதி இதே இங்கிலாந்தில் உலகக்கோப்பை செமி ஃபைனல் நடைபெற்றது. அப்போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாக் ஆரம்பத்திலேயே கொடுத்த கேட்ச்சை பிடித்த தென்னாப்பிரிக்காவின் ஹர்சல் கிப்ஸ் கொண்டாடும் போது பந்தை கோட்டை விட்டார்.

இதையும் படிங்க: வெறும் 3 ரன்ஸ்.. மிட்சேல் மேஜிக்.. அமெரிக்காவில் எம்ஐ அணியை சாய்த்த டிஎஸ்கே திரில் வெற்றி பெற்றது எப்படி?

அதைப் பயன்படுத்திய வாக் 56 ரன்கள் அடித்தது தென்னாபிரிக்காவின் தோல்விக்கு முக்கிய பங்காற்றியது. மறுபுறம் ஃபைனல் சென்ற ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை தோற்கடித்து கோப்பையை வென்றது. அதனால் கிப்ஸ் கேட்ச்சை மட்டுமின்றி உலகக் கோப்பையை விட்டதாக இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. தற்போது 26 வருடங்கள் கழித்து அதே நாளில் ஸ்டீவ் ஸ்மித் விட்ட கேட்ச் ஆஸ்திரேலியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கோட்டை விடுவதற்கு வித்திட்டுள்ளாரா? என்று ரசிகர்கள் பேசுகின்றனர்.

Advertisement