WTC Final : இந்த மாதிரி சான்ஸ் கிடைக்காது, இதுல இந்தியாவுக்கு கப் வாங்கி கொடுங்க – சீனியர் வீரரை வாழ்த்திய கங்குலி

Ganguly
- Advertisement -

இங்கிலாந்து லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வரும் ஜூன் 7 முதல் 11 வரை 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி நடைபெறுகிறது. கடந்த முறை விராட் கோலி தலைமையில் நியூசிலாந்திடம் கோப்பையை நழுவ விட்ட இந்தியா இம்முறை ரோகித் சர்மா தலைமையில் எப்படியாவது சாம்பியன் பட்டம் வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் தோற்று வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க போராட உள்ளது. அதற்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் நட்சத்திர சீனியர் வீரர் அஜிங்க்ய ரகானே யாருமே எதிர்பாராத வகையில் 15 மாதங்கள் கழித்து கம்பேக் கொடுத்துள்ளார்.

Ajinkya Rahane WTC Final

- Advertisement -

மும்பையைச் சேர்ந்த அவர் கடந்த 2011இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஆரம்ப காலங்களில் சிறப்பாக செயல்பட்டு 2015 உலக கோப்பையில் முதன்மை வீரராக விளையாடினார். இருப்பினும் நாளடைவில் சற்று மெதுவாக விளையாடிய அவர் ஐபிஎல் தொடரிலும் அதிரடி காட்ட தவறியதால் இந்திய வெள்ளை பந்து அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். ஆனாலும் டெஸ்ட் அணியில் துணை கேப்டனாக அசத்தி வந்த அவர் 2020/20 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 36க்கு ஆல் அவுட்டான பின் விராட் கோலிக்கு பதிலாக இந்தியாவை அபாரமாக வழி நடத்தி 2 – 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலிய மண்ணில் சரித்திர வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

கங்குலியின் வாழ்த்து:
இருப்பினும் அத்தொடருக்கு பின் சதமடிக்காமல் இருந்ததால் கழற்றி விடப்பட்ட அவருக்கு பதிலாக இளம் வீரர்களை நோக்கி நகர்வதாக தேர்வுக்குழு அறிவித்தது. அதனால் கேரியர் முடிந்ததாக கருதப்பட்டாலும் மனம் தளராமல் போராடிய அவர் சமீபத்திய ரஞ்சிக் கோப்பையில் இரட்டை சதமடித்து 2023 ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் யாருமே எதிர்பாராத வகையில் சரவெடியாக விளையாடி வித்யாசமான ஷாட்களை அடித்து முழுமையான ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

rahane

அதனால் காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக எப்போதுமே வெளிநாடுகளில் சிறப்பாக செயல்பட்டுள்ள காரணத்தால் ரகானே தேர்வாகியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில் இது போன்ற வாய்ப்பு அனைத்து சமயங்களிலும் கிடைக்காது என்று தெரிவிக்கும் முன்னாள் கேப்டன் கங்குலி இதை சரியாக பயன்படுத்தி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுக்குமாறு ரகானேவுக்கு பாராட்டுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இது போன்ற வாய்ப்புகள் உங்களுக்கு அனைத்து நாட்களிலும் கிடைக்காது. ஒருவேளை டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு பெற்றால் அதை அவர் முழுமையாக பயன்படுத்தும் திறமையைக் கொண்டுள்ளார். எனவே அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்” என்று கூறினார். அத்துடன் பும்ரா, ரிஷப் பண்ட் என ஏற்கனவே முக்கிய வீரர்கள் காயமடைந்துள்ள நிலையில் தற்போது கேஎல் ராகுல் காயத்தால் வெளியேறியுள்ளதை பற்றி கங்குலி மேலும் பேசியது பின்வருமாறு.

Sourav Ganguly

“அது துரதிஷ்டவசமானது. அந்த காயம் அவரை ஐபிஎல் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இருந்து வெளியேற்றியதாக நான் செய்தியில் படித்தேன். அதைப்பற்றிய விவரத்தை மருத்துவ குழுவினர் தான் தெரிவிப்பார்கள். இந்த விளையாட்டில் காயங்கள் ஒரு அங்கமாகும். குறிப்பாக வருடம் முழுவதும் நமது வீரர்கள் விளையாடுவதால் காயங்கள் வருவது சகஜமாகும். எனவே அவர் முழுமையாக குணமடைய நான் வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க:IPL 2023 : இது தேவையா? இப்போவும் சொல்றேன் உங்களால பிளே ஆஃப் போக முடியாது, இந்தியாவுக்காக அதை செய்ங்க – கவாஸ்கர் அட்வைஸ்

அதை விட இயக்குனராக இருந்தும் ஐபிஎல் 2023 தொடரில் புள்ளி பட்டியலில் தொடர்ந்து கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி கேபிட்டல்ஸ் அணி கடைசி கட்ட போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு கம்பேக் கொடுக்கும் என்றும் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த 5 போட்டிகளில் நாங்கள் மூன்றில் வென்றுள்ளோம். அடுத்ததாக 5 போட்டிகள் இருக்கின்றன. அந்த அனைத்து போட்டிகளிலும் வென்றால் சிறப்பாக இருக்கும். ஆனால் அதற்காக அனைத்திலும் கவனம் செலுத்தாமல் ஒரு போட்டியில் மட்டும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்” என்று கூறினார்.

Advertisement