பழைய பெருமை ஜெய்க்காது.. இதுலயும் பஞ்சம் வந்துருக்கு.. பாகிஸ்தான் வீழ்ச்சிக்கான காரணம் பற்றி கங்குலி

Sourav Ganguly 3
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் 1992 உலகக் கோப்பையை வென்று முதன்மை அணியாக வலம் வந்தது. இருப்பினும் சமீப காலங்களில் தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் பாகிஸ்தான் தடுமாறி வருகிறது. கடைசியாக 2017 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பாகிஸ்தான் 2021 டி20 உலகக் கோப்பை லீக் சுற்றில் இந்தியாவை தோற்கடித்தது.

அதன் பின் பாகிஸ்தான் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த வெற்றியையும் பெறவில்லை என்றே சொல்லலாம். மாறாக சமீபத்திய ஐசிசி தொடர்களில் ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் போன்ற கத்துக்குட்டிகளிடம் பாகிஸ்தான் தோற்றது. அதன் உச்சமாக 2024 டி20 உலகக் கோப்பையில் கத்துக்குட்டியான அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் பரிதாபமாக தோற்றது.

- Advertisement -

சொந்த மண்ணில் அவமானம்:

அதை விட சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த மற்றொரு கத்துக்குட்டியான வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 – 0 என்ற கணக்கில் பாகிஸ்தான் தோற்றது. அதனால் வங்கதேசத்திற்கு எதிராக முதல் முறையாக ஒரு கிரிக்கெட் தொடரில் தோற்று பாகிஸ்தான் அவமான தோல்வியை சந்தித்தது. அது போக சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 10 டெஸ்ட் போட்டிகளில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாமல் பாகிஸ்தான் மிகப்பெரிய வீழ்ச்சியையும் வரலாறு காணாத தோல்வியும் சந்தித்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியில் திறமைக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளதே இந்த வீழ்ச்சிக்கு காரணம் என்று இந்திய ஜாம்பவான் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தான் நாட்டில் திறமைக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளதை நான் பார்க்கிறேன். ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானை பற்றி நினைக்கும் போது எங்களுக்கு வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், சயீத் அன்வர், முகமத் யூசுப், யூனிஸ் கான் ஆகியோர் நினைவுக்கு வருவார்கள்”

- Advertisement -

சௌரவ் கங்குலி கருத்து:

“அது தான் பாகிஸ்தானை பற்றிய எங்களுடைய நினைவாகும். ஆனால் அது உங்களுக்கு நவீன கிரிக்கெட்டில் வெற்றியை பெற்றுக் கொடுக்காது. கிரிக்கெட்டில் ஒவ்வொரு தலைமுறையும் வெற்றி பெறுவதற்கான வீரர்களை தயாரிக்க வேண்டும். ஆனால் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற உலகக்கோப்பை, இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தொடர்ந்து வங்கதேச தொடர் தோல்வி பாகிஸ்தான் நாட்டில் திறமைக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளதை எனக்கு காட்டுகிறது”

இதையும் படிங்க: எங்களில் பாதி பேருக்கு தெரியாது.. இதுக்காகவே இந்தியாவை வீழ்த்துவோம்.. ஜோஸ் ஹேசல்வுட் நம்பிக்கை

“பாகிஸ்தான் விளையாட்டில் சம்பந்தப்பட்டவர்கள் இதைப்பற்றி பார்க்க வேண்டும். நான் இதை அவமதிப்பதற்காக சொல்லவில்லை. பழைய பாகிஸ்தான் சில மகத்தான கிரிக்கெட்டர்களை கொண்டிருந்தது. ஆனால் தற்போதைய பாகிஸ்தான் அணியில் அது போன்ற வீரர்களை என்னால் பார்க்க முடியவில்லை” என்று கூறினார்.

Advertisement