எங்களில் பாதி பேருக்கு தெரியாது.. இதுக்காகவே இந்தியாவை வீழ்த்துவோம்.. ஜோஸ் ஹேசல்வுட் நம்பிக்கை

Josh Hazelwood
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் மாதம் துவங்குகிறது. ஆஸ்திரேலியாவில் கடைசியாக நடைபெற்ற 2 பார்டர் – கவாஸ்கர் கோப்பைகளையும் இந்தியா அடுத்தடுத்து வென்றது. சொல்லப்போனால் கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2014ஆம் ஆண்டு தான் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தது.

அதன் பின் கடந்த 10 வருடங்களில் நடைபெற்ற அனைத்து பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர்களையும் இந்தியா வென்றுள்ளது. அந்த வரிசையில் இம்முறையும் வென்று ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு இங்குள்ள ரசிகர்களிடம் இருக்கிறது. ஆனால் அதற்கு பதிலடி கொடுத்து இந்தியாவை தோற்கடிக்க ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது.

- Advertisement -

10 வருடங்கள் ஆச்சு:

இந்நிலையில் தாம் அறிமுகமான 2014 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் தான் கடைசியாக இந்திய அணியை ஒரு டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா தோற்கடித்ததாக ஜோஸ் ஹேசல்வுட் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போதுள்ள அணியில் கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட் போன்ற பெரும்பாலான ஆஸ்திரேலிய வீரர்கள் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்றதில்லை என்று அவர் கூறியுள்ளார்.

எனவே அதற்காகவே இம்முறை இந்தியாவை தோற்கடித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்லும் என்று ஹேசல்வுட் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது எப்போதும் சிறப்பான சவாலாகும். அவர்கள் ஆஸ்திரேலியாவில் நிலவும் சூழ்நிலைகளை பயன்படுத்தி விரும்பி விளையாடுகின்றனர்”

- Advertisement -

இந்தியாவை வீழ்த்துவோம்:

“ஆஸ்திரேலியாவில் சவால் மிகவும் பெரிதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். இந்திய அணியில் யார் இருக்கிறார்கள் என்பதை தாண்டி டாப் 6 – 7 பேட்ஸ்மேன்கள் எப்போதுமே நம்ப முடியாத வகையில் விளையாடுகின்றனர். அவர்களுக்கு எதிராக என்னுடைய அறிமுகத் தொடரில் நான் விளையாடினேன். அந்தத் தொடரில் நாங்கள் வென்றதே கடைசி வெற்றியாகும்”

இதையும் படிங்க: எங்க போனாலும் எங்களுக்குன்னே இந்தியர்கள் இதே குறியோட வராங்க.. ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா

“அத்தொடரில் நான் விராட் கோலி விக்கெட்டை எடுத்தேன் என்று நினைக்கிறேன். எங்களுடைய தற்போதைய அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் இந்தியாவை ஒரு டெஸ்ட் தொடரில் வீழ்த்தியதில்லை. கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட் போன்றவர்கள் இந்தியாவை வென்றதில்லை. எனவே அடுத்து வரும் கோடைகாலத்தில் இந்தியாவை தோற்கடித்து நாங்கள் மீண்டும் கோப்பையை வெல்வோம் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.

Advertisement