அவங்க இருக்கப்ப எதுக்கு பயம்? நாம செஞ்ச தப்புக்காக இப்போ அனுபவிக்கிறோம்.. பிசிசிஐக்கு கங்குலி கோரிக்கை

Sourav Ganguly
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட மெகா தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கும் நிலையில் இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 396 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து 209 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன், ரீகன் அகமது, சோயா பஷீர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து முடிந்தளவுக்கு போராடியும் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 253 ரன்களுக்கு அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜாக் கிராவ்ராலி 76, பென் ஸ்டோக்ஸ் 47 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா 6 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

கங்குலி கோரிக்கை:
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 2வது நாள் முடிவில் 28/0 ரன்கள் எடுத்து மொத்தம் 171 ரன்கள் முன்னிலை பெற்று இப்போட்டியில் வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது. ஆனாலும் இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் உறுதியாக இல்லை என்றே சொல்லலாம். ஏனெனில் முதல் போட்டியில் இதே போல முதல் இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா 190 ரன்கள் முன்னிலை பெற்றது.

ஆனால் 2வது இன்னிங்ஸில் நான்காவது நாளில் சுழலுக்கு சாதகமாக மாறிய பிட்ச்சில் வெறும் 231 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் இந்தியா பரிதாபமாக தோற்றது. அதன் வாயிலாக 92 வருடங்களில் தங்களுடைய சொந்த மண்ணில் 100க்கும் மேற்பட்ட ரன்களை முன்னிலையாக பெற்ற ஒரு போட்டியில் இந்தியா அவமான தோல்வியை பதிவு செய்தது. இந்நிலையில் தரமான பவுலர்களைக் கொண்டிருந்தும் சுழலுக்கு சாதகமான மைதானத்தை அமைத்து வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தை நாம் கைவிட வேண்டும் என்று இந்திய அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ’க்கும் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கோரிக்கை வைத்துள்ளார்.

- Advertisement -

இது போன்ற மைதானங்களை அமைத்ததாலேயே தற்போது இந்திய பேட்டிங்கின் தரம் குறைந்து விட்டதாக கவலையை தெரிவிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “பும்ரா, ஷமி, சிராஜ், முகேஷ் ஆகியோர் பந்து வீசுவதை பார்க்கும் போது இந்தியாவில் ஏன் நாம் சுழலுக்கு சாதகமான மைதானங்களை அமைக்க வேண்டும் என்ற ஆச்சரியம் எனக்கு ஏற்படுகிறது. என்னை பொறுத்த வரை நல்ல மைதானத்தில் விளையாடுவது ஒவ்வொரு போட்டியிலும் நம்மை வலுப்படுத்தும்”

இதையும் படிங்க: இங்கிலாந்து அணிக்கெதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 6 விக்கெட் எடுக்க இதுவே காரணம் – ஜஸ்ப்ரீத் பும்ரா பேட்டி

“குறிப்பாக அஸ்வின், ஜடேஜா, குல்தீப், அக்சர் ஆகியோரை கொண்ட நம்முடைய பவுலிங் கூட்டணி எந்த வகையான மைதானத்திலும் 20 விக்கெட்டுகளை எடுக்க கூடியதாகும். கடந்த 6 – 7 வருடங்களாக சொந்த மண்ணில் அமைக்கப்பட்ட சுமாரான பிட்ச்கள் காரணமாக நம்முடைய பேட்டிங்கின் தரம் குறைந்துள்ளது. எனவே நல்ல பிட்ச் அவசியம். அதிலும் இந்திய அணியால் 5 நாட்களில் விளையாடி வெல்ல முடியும்” என்று பிசிசிஐயை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

Advertisement