வேர்ல்டுகப்ல இவர் மட்டும் ஆடுனா பவுலிங்ல ஜொலிப்பாரு. ஆனா அது பும்ரா இல்ல – சவுரவ் கங்குலி கருத்து

Ganguly
- Advertisement -

இந்தியாவில் எதிர்வரும் அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கும் ஐ.சி.சி.யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் 40-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்த தொடருக்கான முழு அட்டவணையையும் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டது.

worldcup

- Advertisement -

இப்படி இந்த உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியாகியதில் இருந்து இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அதோடு இந்த உலகக் கோப்பை தொடர் குறித்த பல்வேறு கருத்துக்களை பல்வேறு முன்னாள் வீரர்களும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ-யின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி : யுஸ்வேந்திர சாஹல் உலககோப்பை இந்திய அணியில் இடம் பெற்றால் கண்டிப்பாக அவர் இந்த தொடரில் ஜொலிப்பார் என்று தனது கருத்தினை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

chahal

இந்தியாவில் நடைபெறும் இந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் விளையாடினால் மிகச் சிறப்பாக இருக்கும். ஏற்கனவே நமது அணியில் ஜடேஜா, அஸ்வின், அக்சர் பட்டேல் போன்ற ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். கூடுதலாக ரவி பிஷ்னாய், குல்தீப் யாதவ் ஆகியோர் ரிஸ்ட் ஸ்பின்னர்களாக இருந்தாலும் யுஸ்வேந்திர சாஹல் என்னை பொறுத்தவரை இது போன்ற பெரிய தொடர்களில் மிகச் சிறப்பாக செயல்படுவார்.

- Advertisement -

20 ஓவர் போட்டியாக இருந்தாலும் சரி, 50 ஓவர் போட்டியாக இருந்தாலும் சரி சாஹல் மிகச் சிறப்பாக செயல்படுவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவரது பந்துவீச்சு முக்கிய நேரத்திலும் மிகவும் தைரியமான ஒன்றாக இருக்கும். அதோடு அவரை இந்த உலகக்கோப்பை தொடரில் விளையாட வைத்தால் நிச்சயம் அவர் இந்திய அணிக்காக அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி ஜொலிப்பார் என கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சும்மா ஜோக்குக்காக சொல்லல. உண்மையிலே நான் எதிர்த்து விளையாடிய போட்டியாளர் இவர்தான் – விராட் கோலி புகழாரம்

இந்த 50 ஓவர் உலககோப்பைக்கு முன்னர் பும்ரா இந்திய அணியில் இணைந்து உலககோப்பை தொடரில் அசத்துவார் என்று அனைவரும் பேசிவரும் வெளியில் கங்குலி சாஹலை புகழ்ந்து பேசியுள்ளது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 121 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement