சும்மா ஜோக்குக்காக சொல்லல. உண்மையிலே நான் எதிர்த்து விளையாடிய போட்டியாளர் இவர்தான் – விராட் கோலி புகழாரம்

Kohli
- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியானது இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்திருந்தது.

Ben Stokes 1

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த ஜூன் 28-ஆம் தேதி துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணியானது 43 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் இரண்டாவது வெற்றியை பெற்றது

இதன்மூலம் இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டுக்கு பூஜ்ஜியம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை நான்காவது இன்னிங்சில் வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 155 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

Ben Stokes

இதன் மூலம் நான்காவது இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்த இங்கிலாந்து கேப்டன் என்ற சாதனையையும், நான்காவது இன்னிங்சில் 6 ஆவது வீரராக களமிறங்கி அதிக ரன்கள் அடித்திருந்த ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ஆடம் கில்கிறிஸ்டின் சாதனையையும் அவர் முறியடித்துள்ளார்.

- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் விளையாடிய இந்த போராட்டமான இன்னிங்ஸ் பலரது மத்தியிலும் இருந்து வாழ்த்துக்கள் பெற்று வருகிறது. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியும் அவரது இந்த மிகச்சிறப்பான ஆட்டத்தை பாராட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் குறிப்பிடப்பட்டதாவது :

இதையும் படிங்க : ஆசிய கேம்ஸ் தொடரில் தவானுக்கு பதிலா அந்த தமிழக வீரரை கேப்டனா போடுங்க – தினேஷ் கார்த்திக் உருக்கமான கோரிக்கை

நான் விளையாட்டுக்காக சொல்லவில்லை உண்மையிலேயே நான் எதிர்த்து விளையாடிய வீரர்களில் கடினமான போட்டியாளர் என்றால் அது பென் ஸ்டோக்ஸ் தான். அவரது இந்த குவாலிட்டியான இன்னிங்ஸ் மூலம் அவர் எப்படிப்பட்ட வீரர் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இருந்தாலும் ஆஸ்திரேலியா மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது என விராட் கோலி பகிர்ந்துள்ளார்.

Advertisement