ஆசிய கேம்ஸ் தொடரில் தவானுக்கு பதிலா அந்த தமிழக வீரரை கேப்டனா போடுங்க – தினேஷ் கார்த்திக் உருக்கமான கோரிக்கை

Rohit Sharma Shikhar Dhawan Dinesh karthik
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 8 முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. இத்தொடரில் சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்தும் லட்சியத்துடன் களமிறங்க உள்ளது. குறிப்பாக 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்தித்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் வெற்றியை பதிவு செய்ய தவறிய ரோகித் சர்மா கேப்டன்ஷிப் பதவியை தக்க வைத்துக்கொள்ள இத்தொடரில் வென்றாக கட்டாயத்தில் களமிறங்குகிறார் என்றே சொல்லலாம்.

Dhawan-IND-Team

- Advertisement -

அந்த நிலையில் வரும் செப்டம்பர் மாத இறுதியில் அண்டை நாடான சீனாவில் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. கடைசியாக கடந்த 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் இந்தியா பங்கேற்கவில்லை. அதன் பின் பல்வேறு காரணங்களால் கடந்த 9 வருடங்களாக சேர்க்கப்படாமல் இருந்து வந்த கிரிக்கெட்டை தற்போது மீண்டும் ஆசிய விளையாட்டு கவுன்சில் இணைத்துள்ளது. ஆனால் அந்த சமயத்தில் 2023 உலகக் கோப்பை போட்டிகள் துவங்குவதால் அதற்கு முழுமையாக பயிற்சி எடுத்து புத்துணர்ச்சியுடன் களமிறங்க வேண்டிய நிலைமைக்கு ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை அணி தள்ளப்பட்டுள்ளது.

தினேஷ் கார்த்திக் கோரிக்கை:
அதன் காரணமாக அத்தொடரில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் கூடிய 2வது அணியை அத்தொடரில் களமிறக்குவதற்கு பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. குறிப்பாக கேரியர் முடிந்ததாக கருதப்பட்டாலும் 2013, 2017 சாம்பியன்ஸ் ட்ராபியில் தங்க பேட் விருது வென்று மிஸ்டர் ஐசிசி என ரசிகர்களால் அழைக்கப்படும் ஷிகர் தவான் சமீப காலங்களில் ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக இளம் அணியை சிறப்பாக வழி நடத்தி இந்தியாவுக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

Ravichandra Ashwin Rohit Sharma IND vs BAN

அதனால் இந்தியாவுக்கு அவர் ஆற்றிய பங்கை பாராட்டும் வகையில் இத்தொடரில் கேப்டனாக அறிவிக்க பிசிசிஐ தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் ஷிகர் தவானை விட 2011 உலகக்கோப்பை 2013 சாம்பியன் டிராபி வெற்றிகளில் முக்கிய பங்காற்றி கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 400க்கும் மேற்பட்ட விக்கெட்களையும் 3000க்கும் அதிகமான ரன்களையும் எடுத்து இந்தியாவுக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் தமிழகத்தின் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த தொடரில் கேப்டனுக்கு செயல்பட வேண்டும் என்று தினேஷ் கார்த்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “பவுலிங் தரம் மற்றும் விக்கெட்டுகள் எடுத்த எண்ணிக்கையின் அடிப்படையில் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த விளையாட்டில் விளையாடிய மகத்தான வீரர்களில் ஒருவர். மேலும் உலகக்கோப்பைக்காக முதன்மை அணி தயாராகும் போது நம்முடைய பி அணியை இந்த ஆசிய விளையாட்டு தொடரில் அனுப்ப உள்ளோம். அது போன்ற சூழ்நிலையில் 2023 உலகக்கோப்பை அணியில் இடம் பிடிக்காத பட்சத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் அந்த அணியின் கேப்டனாக செயல்படுவதற்கு தகுதியானவர் என்று நான் கருதுகிறேன்”

Dinesh Karthik

“எனவே குறைந்தபட்சம் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலாவது அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன். அது அவருடைய தொப்பியில் மின்னப் போகும் மற்றொரு நட்சத்திரமாக இருக்கும்” என்று கூறினார். அதாவது கடந்த 10 வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினை முந்தி அதிக தொடர் நாயகன் விருதுகளை வென்ற வீரராக சாதனை படைத்துள்ள அஷ்வினுக்கு இதுவரை விளையாடும் 11 பேர் அணியில் கூட நிரந்தரமான இடம் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க:வீடியோ : ஹாட்ரிக் சிக்ஸர்களுடன் சதமடித்து போராடிய ஸ்டோக்ஸ் – கில்கிறிஸ்ட் 33 வருட சாதனையை தூளாக்கி 2 உலக சாதனை

குறிப்பாக தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருந்தும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஸ் ஃபைனலில் வாய்ப்பு பெறாத அவர் இதுவே வேறு நாட்டில் பிறந்திருந்தால் கேப்டனாக இருந்திருப்பார் என நிறைய ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் இந்திய அணியில் இதுவரை துணை கேப்டன் பதவியை கூட பெறாத அஷ்வினை குறைந்தபட்சம் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கேப்டனாக அறிவித்து பெருமைப்படுத்துங்கள் என தினேஷ் கார்த்திக் உருக்கமான கோரிக்கையை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement