- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டி20 உலககோப்பையில் விராட் கோலி எந்த இடத்தில் களமிறங்கி விளையாட வேண்டும்? – சவுரவ் கங்குலி பேட்டி

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் அடுத்த மாதம் ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் வேளையில் இந்த தொடரின் முடிவில் கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்து எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதோடு இந்த தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும் அட்டவணையும் அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது அணிகளை மே 1-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி தெரிவித்ததால் அனைத்து அணிகளும் தங்களது அணியின் வீரர்களின் பட்டியலை அறிவித்துவிட்டன. அந்த வகையில் இந்திய அணியின் நிர்வாகமான பிசிசிஐ-யையும் ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டு விட்டது.

- Advertisement -

அதில் விராட் கோலிக்கு இடம் கிடைக்காது என்று பேசப்பட்டு வந்த வேளையில் மீண்டும் இந்தியாவிற்காக விளையாட விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் விராட் கோலி எந்த இடத்தில் விளையாட வேண்டும்? என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளத்தில் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சௌரவ் கங்குலி டி20 உலக கோப்பையில் விராட் கோலி எந்த இடத்தில் களமிறங்கி விளையாட வேண்டும்? என்பது குறித்த தனது கருத்தினை வெளிப்படையாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலியை துவக்க வீரராக பயன்படுத்துவது அவசியம். அவர் ஓப்பனிங்கில் களமிறங்கினால் மிகச் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் கடைசியாக அவர் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் சில இன்னிங்ஸ்களே அதற்கு சாட்சியாகும். டி20 உலக கோப்பைக்காக தற்போது நாம் சரியான அணியை தேர்வு செய்துள்ளோம்.

இதையும் படிங்க : கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறாரா கே.எல் ராகுல்.. லக்னோ அணியின் நிர்வாகம் அளித்துள்ள பதில்

பந்துவீச்சு துறையிலும் இந்திய அணி சிறப்பாக இருப்பதாகவே தோன்றுகிறது. இப்போது எல்லாம் ஐபிஎல் தொடரில் 240 முதல் 250 ரன்கள் வரை அடிக்க முடிவதை பார்க்க முடிகிறது. அதற்கு காரணம் பேட்டிங் பிட்ச்கள் மற்றும் இந்தியாவில் உள்ள சிறிய மைதானங்கள் தான். இம்பேக்ட் பிளேயர் விதிமுறையால் அனைத்து அணிகளுமே ஒரு பேட்ஸ்மேன் எக்ஸ்ட்ரா விளையாடுவதால் புதிய பரிமாணம் ஏற்பட்டுள்ளது என கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -