WTC Final : அஸ்வின் எடுக்காதது கூட பரவால்ல, ஆஸிக்கு எதிரா இப்டியா கேப்டன்ஷிப் பண்ணுவீங்க? ரோஹித்தை மீண்டும் விமர்சித்த கங்குலி

Sourav Ganguly
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜூன் 7ஆம் தேதியான நேற்று இங்கிலாந்தில் இருக்கும் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜா டக் அவுட்டானாலும் டேவிட் வார்னர் 43, மார்னஸ் லபுஸ்ஷேன் 26 என முக்கிய பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால் அடுத்ததாக களமிறங்கி 4வது விக்கெட்டுக்கு 251 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய பவுலர்கள் விழி பிதுங்கும் அளவுக்கு அதிரடியாக எதிர்கொண்ட டிராவிஸ் ஹெட் ஃபைனலில் சதமடித்த முதல் வீரராக சாதனை படைத்து 146* (156) ரன்கள் எடுத்தார்.

Travis Head 1

- Advertisement -

அவருடன் மறுபுறம் தம்முடைய ஸ்டைலில் நங்கூரமாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் சதத்தை நெருங்கி 95* ரன்கள் எடுத்துள்ளார். அதனால் முதல் நாள் முடிவில் 327/3 ரன்களை குவித்துள்ள ஆஸ்திரேலியா கோப்பையை வெல்வதற்கு தேவையான அற்புதமான துவக்கத்தை பெற்றுள்ளதால் இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறுவது கடினம் என்று ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். முன்னதாக இந்த போட்டியில் வானிலையை கருத்தில் கொண்டு ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோருடன் சர்துள் தாகூரை தேர்ந்தெடுத்த ரோகித் சர்மா ஒரே ஒரு ஸ்பின்னராக ரவீந்திர ஜடேஜாவை தேர்வு செய்தார்.

கங்குலி அதிருப்தி:
அதனால் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவிச்சந்திரன் அஷ்வினை அவர் பெஞ்சில் அமர வைத்தது பெரிய விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அத்துடன் மாபெரும் ஃபைனலில் முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோர் குவித்து அழுத்தத்தை தாமாகவே எதிரணி பக்கம் திருப்பும் முடிவை எடுக்கத் தவறிய ரோகித் சர்மாவை விமர்சித்த முன்னாள் கேப்டன் கௌரவ கங்குலி தாமாக இருந்தால் முதலில் பந்து வீசியிருக்க மாட்டேன் என அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்நிலையில் இப்போட்டியில் உணவு இடைவெளிக்கு முன்பே 3 விக்கெட்டுகளை எடுத்த இந்தியா அதன் பின் ரன்களை வாரி வழங்கி மோசமாக பந்து வீசியதாக அவர் மீண்டும் விமர்சித்துள்ளார்.

Rohit-Toss

குறிப்பாக டிராவிஸ் ஹெட் அதிரடியாக அடித்து ஆஸ்திரேலியா எளிதாக ரன்களை குவிக்கும் அளவுக்கு ஃபீல்டர்களை சரியாக இடத்தில் நிறுத்த தவறிய ரோகித் சர்மா சுமாரான கேப்டன்ஷிப் செய்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்ருமாறு. “இந்தியா நிச்சயமாக ஏமாற்றத்துடன் இருக்கும். ஏனெனில் ஆஸ்திரேலியா 76/3 என்ற ஸ்கோருடன் தடுமாறிய போது இந்தியா நல்ல துவக்கத்தை பெற்றது. ஆனால் அதன் பின் ஆஸ்திரேலியா கொக்கி போட்டு ரன்களை எடுக்கும் அளவுக்கு இந்தியா சுமாராக செயல்பட்டது. கிரிக்கெட்டில் இது போன்ற பார்ட்னர்ஷிப் அமையும் என்பதை நான் அறிவேன்”

- Advertisement -

“குறிப்பாக பேட்டிங் செய்யும் அணி நங்கூரமாக நின்று கம்பேக் கொடுக்கப் போராடுவது சகஜமாகும். இருப்பினும் இப்போட்டியில் உணவு இடைவெளிக்கு பின் இந்தியா சிறப்பாக துவங்கியும் அதன் பின் நேரம் செல்ல செல்ல கொஞ்சம் கொஞ்சமாக தாக்குதலை இழந்தனர். குறிப்பாக டிராவிஸ் ஹெட் எளிதாக கொக்கி போட்டு ரன்களை அடித்தார் என்று நான் நினைக்கிறேன். ஏற்கனவே நல்ல ரன்களை அடித்துள்ள அவர் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார் என்பதை நான் அறிவேன். ஆனாலும் அவர்கள் ஒரு கட்டத்தில் 76/3 என திண்டாடினார்கள்”

Ganguly

“அந்த சமயத்தில் தான் ரோகித் சர்மா எளிதாக ரன்களை குவிக்கும் அளவுக்கு ஃபீல்டர்களை நிறுத்தினார். அதை பயன்படுத்திய ஆஸ்திரேலியா தற்போது வலுவான நிலையில் உள்ளது. அதனால் தேனீர் இடைவெளிக்கு பின்பும் சிறப்பாக பேட்டிங் செய்த அவர்கள் முதல் நாளை மகிழ்ச்சியுடன் முடித்தனர்” என்று கூறினார்.

இதையும் படிங்க:WTCFinal : பயப்படாதீங்க. இந்த பிட்ச்ல நமக்கும் எந்த கஷ்டமும் இருக்காது. இவங்க 2 பேரும் அசத்துவாங்க – ஹர்பஜன் சிங் சப்போர்ட்

அவர் கூறுவது போல உணவு இடைவெளிக்குப்பின் ஃபீல்டர்களை சரியாக நிறுத்தி ரன்கள் கொடுப்பதை குறைத்திருந்தாலே தாமாக அழுத்தம் உருவாகி விக்கெட் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால் அதை செய்யாத ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் ஆஸ்திரேலியா எளிதாக அடிக்கும் அளவுக்கு செயல்பட்டது ரசிகர்களை வேதனையடைய வைக்கிறது.

Advertisement