என்னங்க அவரு கம்பியூட்டர் கேம் ஆடுற மாதிரி பேட்டிங்ல பின்னி எடுக்குறாரு. மும்பை வீரரை பாராட்டிய – சவுரவ் கங்குலி

Sourav Ganguly
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 54-வது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியானது 200 ரன்கள் என்கிற இலக்கினை 16.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 200 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் புள்ளி பட்டியலிலும் முன்னேற்றத்தை கண்டுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது மிகப்பெரிய இலக்கினை எட்டி இந்த வெற்றியை சாத்தியமாக்க மிக முக்கிய காரணமாக அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரான சூரியகுமார் யாதவ் திகழ்ந்தார் என்றால் அது மிகை அல்ல.

- Advertisement -

ஏனெனில் 35 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஏழு பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் என 83 ரன்கள் குவித்து அதிரடி காட்ட பின்னால் வந்த வீரர்களும் கை கொடுக்க மும்பை அணி 21 பந்துகள் மீதம் இருக்கையிலே 200 ரன்களை அடித்து அபாரமான வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து ஆட்டநாயகன் விருது பெற்ற சூரியகுமார் யாதவுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் பிசிசிஐயின் முன்னாள் தலைவரும், தற்போதைய டெல்லி அணியின் ஆலோசகரமான கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் சூரியகுமார் யாதவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் குறிப்பிடப்பட்டதாவது :

- Advertisement -

சூரியகுமார் யாதவ் தற்போதைய டி20 கிரிக்கெட்டின் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக இருப்பதற்கு இந்த இன்னிங்ஸ் ஒரு சான்று. அதோடு அவர் விளையாடிய விதம் ஒரு கம்ப்யூட்டர் விளையாடுவது போன்று இருந்தது என சூர்யகுமார் யாதவை அவர் பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க : வீடியோ : சென்னையை அச்சுறுத்திய டெல்லி – கடைசி நேரத்தில் அதிரடியான ஃபினிஷிங் கொடுத்த தல தோனி, ஸ்கோர் இதோ

ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் 360 டிகிரி வீரர் என்று பாராட்டப்படும் சூரியகுமார் யாதவ் இந்த ஐபிஎல் தொடரிலும் தனது அபாரமான அதிரடி ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருவது மும்பை அணியின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement