வீடியோ : சென்னையை அச்சுறுத்திய டெல்லி – கடைசி நேரத்தில் அதிரடியான ஃபினிஷிங் கொடுத்த தல தோனி, ஸ்கோர் இதோ

- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 10ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 55வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதின. அதில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கும் டெல்லி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய நிலையில் 2வது இடத்தில் இருக்கும் சென்னையும் நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்ய வெற்றி காண வேண்டிய சூழ்நிலையில் களமிறங்கியது. அந்த நிலைமையில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் எம்எஸ் தோனி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

குறிப்பாக இன்றைய பிட்ச் நேரம் செல்ல செல்ல சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் முதலில் பேட்டிங் செய்வதாக அவர் அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சென்னைக்கு வழக்கத்துக்கு மாறாக தடுமாறிய டேவோன் கான்வேவை 10 (13) ரன்களில் அவுட்டாக்கிய அக்சர் படேல் தன்னுடைய அடுத்த ஓவரிலேயே மறுபுறம் அதிரடியாக விளையாட முயன்ற ருதுராஜையும் 4 பவுண்டரியுடன் 24 (18) ரன்களில் காலி செய்தார். அதனால் 49/2 ஆரம்பத்திலேயே தடுமாறிய சென்னைக்கு அடுத்து களமிறங்கிய மொய்ன் அலி டெல்லியின் தரமான சுழலை அதிரடியாக எதிர்கொள்ள முடியாமல் 7 (12) ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவைக் கொடுத்தார்.

- Advertisement -

அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் அதிரடி காட்ட முடியாமல் தடுமாறிய ரஹானே 21 (20) ரன்களில் லலித் யதாவின் சிறப்பான கேட்ச் காரணமாக ஏமாற்றுத்துடன் பெவிலியன் திரும்பினார். அதனால் 77/4 என மேலும் தடுமாறிய சென்னை 11 ஓவர்கள் கடந்தும் ஒரு சிக்ஸர்கள் கூட அடிக்க முடியாமல் திண்டாடியது. அந்த நிலைமையில் களமிறங்கிய சிவம் துபே 14வது ஓவரில் அடுத்தடுத்த சிக்ஸர்களைப் பறக்க விட்டு அழுத்தத்தை சற்று குறைத்தார். லலித் யாதவ் வீசிய அதே ஓவரில் மறுபுறம் நின்ற அம்பத்தி ராயுடு தனது பங்கிற்கு பவுண்டரியும் சிக்ஸரும் அடித்து அசத்தினார்.

ஆனால் அடுத்த ஓவரிலேயே சிவம் துபே 3 சிக்சருடன் 25 (12) ரன்களில் அவுட்டாக ராயுடுவும் 23 (17) ரன்களில் ஆட்டமிழந்ததால் மீண்டும் தடுமாறிய சென்னை 150 ரன்களை தொடுமா என்று அந்த அணி ரசிகர்கள் கவலையடைந்தனர். அந்த இக்கட்டான நிலைமையில் களமிறங்கிய கேப்டன் தோனி 19வது ஓவரில் கலீல் அகமது வீசிய 3வது பந்தில் சிக்ஸர் அடித்து 4வது பந்தில் பவுண்டரியை விளாசி 5வது பந்தில் டபுள் எடுத்து 6வது பந்தில் மீண்டும் சிக்ஸர் பறக்க விட்டார்.

- Advertisement -

அதைத்தொடர்ந்து மிட்சேல் மார்ஷ் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ரவீந்திர ஜடேஜா அடுத்த பந்தில் 21 (16) ரன்களில் அவுட்டானார். அடுத்த சில பந்துகளிலேயே மறுபுறம் போராடிய தோனியும் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 20 (9) ரன்களை 222.22 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி ஓரளவு காப்பாற்றி அவுட்டானதால் 20 ஓவர்களில் சென்னை 167/8 ரன்கள் எடுத்தது. அந்தளவுக்கு ஆரம்பம் முதலே சிறப்பாக பந்து வீசிய டெல்லி சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ் 3 விக்கெட்டுகளையும் அக்சர் படேல் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

இந்த போட்டியின் பிட்ச் பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதை பயன்படுத்திய டெல்லி பவுலர்கள் ஆரம்பம் முதலே நேர்த்தியாக பந்து வீசி சென்னையை அதிரடி காட்ட முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை எடுத்தனர். அதனால் அதிரடியாக பெரிய ஸ்கோரை எடுக்க தவறினாலும் சென்னை போராடும் அளவுக்கு நல்ல ரன்களை எடுத்துள்ளது.

இதையும் படிங்க: IPL 2023 : இந்த பவுலிங்க வெச்சுகிட்டு எப்போவும் கப் ஜெயிக்க முடியாது – மோசமான ஐபிஎல் வரலாற்று சாதனை படைத்த ஆர்சிபி

எனவே உறுதியான வெற்றிக்கு எக்ஸ்ட்ராவாக 20 – 30 ரன்களை எடுக்க தவறிய சென்னை அதை சிறப்பாக ஃபீல்டிங் செய்து துல்லியமாக பந்து வீசினால் தான் இந்த போட்டியில் வெற்றி காண முடியும் என்ற கட்டாயத்தில் விளையாடி வருகிறது.

Advertisement