- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி: எதிரணி யாராக இருந்தாலும் இந்தக் காரணத்தால் இந்திய அணி வெல்லும்.. கங்குலி பேட்டி

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை தொட்டுள்ளது. அதில் பாதுகாப்பு காரணங்களால் துபாயில் தங்களுடையப் போட்டிகளை விளையாடும் இந்திய அணி செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தத் தொடரில் ஆரம்பத்திலேயே வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா 2வது போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை வீழ்த்தி கடைசிப் போட்டியில் நியூசிலாந்தையும் 44 ரன்கள் வித்தியாசத்தில் சாய்த்தது.

குறிப்பாக 2019 உலகக் கோப்பை உட்பட ஐசிசி தொடர்களில் நியூசிலாந்து அணி எப்போதுமே இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறது. அப்படிப்பட்ட நியூசிலாந்தை மார்ச் இரண்டாம் தேதி துபாயில் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா ஸ்ரேயாஸ் ஐயர் 79, அக்சர் படேல் 42, பாண்டியா 45 ரன்கள் எடுத்த உதவியுடன் 250 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

- Advertisement -

சவாலான ஆஸ்திரேலியா:

அடுத்ததாக விளையாடிய நியூசிலாந்தை நன்றாக பவுலிங் செய்த இந்தியா 45.3 ஓவரில் 205 ரன்களுக்கு சுருட்டி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 81 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். அந்த வகையில் குரூப் சுற்றில் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்ற இந்தியா தங்களது செமி ஃபைனலில் மார்ச் நான்காம் தேதி இதே துபாயில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.

2023 உலகக் கோப்பையில் தொடர்ந்து 10 வெற்றிகளுடன் சொந்த மண்ணில் மிரட்டிய இந்தியாவை ஃபைனலில் தோற்கடித்த ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. அதனால் உலக சாம்பியனாக இருக்கும் ஆஸ்திரேலியா சமீபத்தில் டெஸ்ட் தொடரில் இந்தியாவை 3 – 1 என்ற கணக்கில் 10 வருடங்கள் கழித்து தோற்கடித்தது. அப்படிப்பட்ட வலுவான ஆஸ்திரேலியாவை ஐசிசி தொடரில் நாக் அவுட் சுற்றில் வீழ்த்துவது இந்தியாவுக்கு சிம்ம சொப்பனம் என்றே சொல்லலாம்.

- Advertisement -

கங்குலி நம்பிக்கை:

இந்நிலையில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஆழமான திறமை கொண்டிருப்பதால் இந்திய அணி ஆஸ்திரேலியா உட்பட எந்த எதிரணியையும் வீழ்த்தி கோப்பையை வெல்லுமென ஜாம்பவான் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியா 2024 டி20 உலகக் கோப்பையை வென்று 2023 உலகக் கோப்பை ஃபைனலில் விளையாடியது. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் எதிரணி யாராக இருந்தாலும் இந்தியா மிகவும் வலுவான அணி”

இதையும் படிங்க: இந்த 2 மேஜிக்கை வைத்திருக்கும் வருண் நாக் அவுட்டில் ஆடனும்.. இந்திய அணி மாறக்கூடாது.. ஹர்பஜன் பேட்டி

“யாரை வேண்டுமானாலும் வீழ்த்தும் திறமை இந்தியாவிடம் இருக்கிறது. காயம் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படக்கூடியது. வேகப்பந்து பேச்சாளர்களின் கேரியரில் காயம் ஒரு அங்கமாகும். ஜஸ்ப்ரித் பும்ராவுடன் சேர்ந்து ஷமி நிறைய போட்டிகளை இந்தியாவுக்கு வென்று கொடுத்துள்ளார். அவர் நல்ல பவுலர்” என்று கூறினார்.

- Advertisement -