பி.சி.சி.ஐ தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகிறாரா கங்குலி? – சர்ச்சையை ஏற்படுத்திய திடீர் பதிவு

Ganguly
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி கடந்த 1992-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 2008-ஆம் ஆண்டு வரை 113 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 311 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதனை தவிர்த்து ஐபிஎல் தொடரில் 2008-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரை விளையாடியுள்ள அவர் 59 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய அவர் கடந்த முறை நடைபெற்ற பிசிசிஐ தலைவர் போட்டிக்கான தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்று பிசிசிஐயின் தலைவராக தற்போது திறம்பட செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் பிசிசிஐயின் தலைவரான சௌரவ் கங்குலி நேற்று வெளியிட்டுள்ள ஒரு ட்விட்டர் பதிவு தற்போது திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் கங்குலி வெளியிட்டுள்ள அந்த ட்விட்டர் பதிவில் பதிவிட்டிருப்பதாவது : 1992-ம் ஆண்டில் கிரிக்கெட் பயணத்தை தொடங்கி 30 ஆண்டுகள் ஆகிறது. அன்று முதல் கிரிக்கெட் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. முக்கியமாக, உங்களின் பேராதரவு கிடைத்துள்ளது.

- Advertisement -

என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் உடன் இருந்த ஒவ்வொருவருக்கும் நன்றி. இன்று, மக்களுக்கு உதவக் கூடிய புதிய அத்தியாத்தை தொடங்க திட்டமிட்டிருக்கிறேன். எனது இந்த புதிய திட்டத்திற்கும் உங்களுடைய ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அவரின் இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கங்குலியின் இந்த திடீர் ட்விட்டர் பதிவினை அடுத்து சமூகவலைதளங்களில் சில வதந்திகள் பரவி வருகின்றன. அதன்படி பிசிசிஐயின் தலைவர் பதவியில் இருந்து அவர் விலக போவதாக தகவல் பரவியது. மேலும் அவர் கிரிக்கெட் துறையில் இருந்து விலகி அரசியலில் நுழைய இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

அதோடு அவர் அரசியலில் இறங்கினால் பாஜகவில் சேரலாம் என்றும் பேசப்பட்டது. இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

இதையும் படிங்க : ஐ.பி.எல் 2022 தொடரின் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்து வெளியிட்ட சச்சின் – முழுலிஸ்ட் இதோ

பிசிசிஐ தலைவரான கங்குலி அவரது பதவியை ராஜினாமா செய்யவில்லை என்ற தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது பி.சி.சி.ஐ யின் தலைவராக இருக்கும் கங்குலி மற்றும் அவரது தலைமையிலான நிர்வாகம் சரியான திட்டமிடலுடன் இந்தாண்டு 15 ஆவது ஐ.பி.எல் தொடரினை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement