ஐ.பி.எல் 2022 தொடரின் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்து வெளியிட்ட சச்சின் – முழுலிஸ்ட் இதோ

Sachin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் நடப்பு ஐ.பி.எல் தொடரின் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். இந்தியாவில் நடைபெற்று முடிந்த 15-வது ஐபிஎல் தொடருக்கான சாம்பியன் பட்டத்தை குஜராத் அணி கைப்பற்றி அசத்தியது. இந்த 15-வது தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு ஒவ்வொரு அணியிலும் நான்கு வீரர்கள் மட்டுமே தக்க வைக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இத்தொடரில் புதிதாக குஜராத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களை தலைமையாகக் கொண்டு இரண்டு அணிகளும் உருவாக்கப்பட்டன.

Hardik Pandya MS DHoni GT vs CSK

- Advertisement -

அப்படி புதிதாக சேர்க்கப்பட்ட அணிகளும் மெகா ஏலத்தில் கலந்து கொண்டு தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு வாங்கினர். இப்படி வீரர்கள் அனைவரும் கலைக்கப்பட்டதால் ஒவ்வொரு அணியிலும் பங்கேற்று இருந்த முக்கிய வீரர்கள் வெவ்வேறு அணிகளுக்கு இடம் மாறினர். இதன் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை கைப்பற்றப்போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அதிகளவில் நிலவியது.

இவ்வேளையில் ஐபிஎல் வரலாற்றில் ஜாம்பவான் அணிகளாக பார்க்கப்படும் மும்பை மற்றும் சென்னை அணிகள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தன. குறிப்பாக புள்ளி பட்டியலில் கடைசி இரு இடங்களை பிடித்து இவ்விரு அணிகளும் வெளியேற இத்தொடரில் அறிமுக அணிகளாக விளையாடிய லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிலும் குறிப்பாக குஜராத் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.

Shikar Dhawan

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை வைத்து இந்த ஆண்டின் சிறந்த ஐபிஎல் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர்கள் பலரும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பெஸ்ட் பிளேயிங் லெவனை வெளியிட்டுள்ளார். அதில் ரோகித் சர்மா, விராத் கோலி, மகேந்திர சிங் தோனி போன்ற ஜாம்பவான்களுக்கு அவர் இடமளிக்கவில்லை. முழுவதுமாக இந்த தொடரில் அற்புதமாக செயல்பட்ட வீரர்களை மட்டும் வைத்து அவர் இந்த அணியை தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

அவர் தேர்வு செய்துள்ள அணியில் துவக்க வீரர்களாக தவான் மற்றும் பட்லர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 3வது வீரராக கே.எல் ராகுலையும், நான்காவதாக ஹார்டிக் பாண்டியாவை கேப்டனாகவும் அவர் தேர்வு செய்துள்ளார். ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் மில்லர் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் உள்ளனர். விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதோடு சுழற்பந்து வீச்சாளராக ரஷீத் கான் மற்றும் சாஹல் ஆகியோரையும், வேகப்பந்து வீச்சாளர்களாக ஷமி மற்றும் பும்ரா ஆகியோரை சச்சின் தேர்வு செய்துள்ளார். சச்சின் தேர்வு செய்த ஐ.பி.எல் 2022 பெஸ்ட் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : அடுத்த வருஷம் ஐ.பி.எல் கோப்பையை ஜெயிக்கப்போவது இந்த டீம் தான் – சூரியகுமார் யாதவ் அதிரடி

1) ஷிகார் தவான், 2) ஜாஸ் பட்லர், 3) கே.எல் ராகுல், 4) ஹர்டிக் பாண்டியா(கேப்டன்), 5) டேவிட் மில்லர், 6) லியாம் லிவிங்ஸ்டன், 7) தினேஷ் கார்த்திக், 8) ரஷீத் கான், 9) முகமது ஷமி, 10) ஜஸ்பிரீத் பும்ரா, 11) யுஸ்வேந்திர சாஹல்

Advertisement