வீடியோ : இந்த 5 இளம் இந்திய வீரர்கள் அடுத்த 5 வருசத்துக்கு ஐபிஎல் தொடரில் ராஜாங்கம் நடத்துவங்க – கங்குலியின் தேர்வு இதோ

Ganguly
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்குகிறது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத்தை முன்னாள் சாம்பியனான எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் கொள்கிறது. முன்னதாக இந்தியாவுக்கு தரமான இளம் வீரர்களை கண்டறிந்து பட்டை தீட்டி சர்வதேச கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் நோக்கத்தில் துவங்கப்பட்ட ஐபிஎல் கடந்த 15 வருடங்களில் அந்த வேலையை திறம்பட செய்து வருகிறது என்றே சொல்லலாம்.

Dc

- Advertisement -

எடுத்துக்காட்டாக ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா போன்ற தற்சமயத்தில் இந்திய அணியின் முக்கிய வீரர்களாக செயல்படும் வீரர்கள் ஐபிஎல் தொடரால் அறியப்பட்டவர்கள். அதே போல் சுப்மன் கில், பிரிதிவி ஷா போன்ற போன்ற அடுத்த தலைமுறைக்கான தரமான கிரிக்கெட் வீரர்களும் கிடைத்து வருகிறார்கள். அத்துடன் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் போன்ற வெளிநாடுகள் தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாத காரணத்தால் தற்போது கத்துக் குட்டிகளாக மாறி திண்டாடி வருகின்றன.

கங்குலியின் தேர்வு:
மறுபுறம் ஐபிஎல் தொடரில் நிறைய இளம் வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுவதால் ஒரே நேரத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 2 அணியை விளையாட வைக்கும் அளவுக்கு இந்தியாவுக்கு ஏராளமான வருங்கால நட்சத்திரங்கள் கிடைத்துள்ளனர். அந்த வரிசையில் ஐபிஎல் தொடரில் அடுத்த 5 வருடங்களில் ரிஷப் பண்ட், பிரிதிவி ஷா, சுப்மன் கில், ருதுராஜ் கைக்வாட், உம்ரான் மாலிக் ஆகிய 5 வீரர்கள் அசத்தலாக செயல்படுவார்கள் என்று முன்னாள் ஜாம்பவான் கேப்டன் மற்றும் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

Ruturaj

மேலும் இந்த சீசனில் சூரியகுமார் அபாரமாக செயல்படுவார் என்றாலும் அவரை இளம் வீரராக கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இந்த சீசனில் நிச்சயமாக சூரியகுமார் யாதவ் அசத்துவார். இருப்பினும் அவரை இனிமேலும் இளம் வீரர் என்று கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. எனவே இளம் வீரர்களில் பிரிதிவி ஷா டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட கூடியவர்”

- Advertisement -

“மேலும் 25 வயதாகும் ரிஷப் பண்ட் அவருக்கு அடுத்தபடியாக 2வது வீரராக அசத்துவார். அதே போல் ருதுராஜ் கைக்வாட் மீது எனக்கு தனி கவனம் உள்ளது. எனவே இந்த 3 பேட்ஸ்மேன்கள் அடுத்த 5 வருடங்களில் அசத்துவார்கள் என்று நம்புகிறேன். அதே போல உம்ரான் மாலிக் ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து ரசிகர்களை தனது பக்கம் இழுப்பார். ஏனெனில் அவரிடம் அற்புதமான வேகம் உள்ளது” என்று கூறினார்.

அப்போது அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி வரிசையில் இந்திய பேட்டிங் துறையின் அடுத்த சூப்பர் ஸ்டாராக கருதப்படும் சுப்மன் கில் பற்றி கூறுமாறு கங்குலியிடம் கேட்டுக்கொண்டார். அப்போது அவருடைய பெயர் மறந்து விட்டதாக தெரிவித்த கங்குலி அவரும் நிச்சயமாக வருங்காலங்களில் அபாரமாக செயல்படுவார் என்று தெரிவித்து மேலும் பேசியது பின்வருமாறு. “ஆம் கண்டிப்பாக. அவருடைய பெயர் எனது மனதில் தவறி சென்று விட்டது. என்னுடைய 5வது வீரர் சுப்மன் கில் ஆவார். எனவே பிரிதிவி ஷா, ரிஷப் பண்ட், ருதுராஜ் கைக்வாட், உம்ரான் மாலிக், சுப்மன் கில் ஆகியோருடன் சூரியகுமார் யாதவும் இந்த பட்டியலில் வருவார்” என்று கூறினார்.

இதையும் படிங்க:அஷ்வின் துணை கேப்டனாக சரிபட்டு வரமாட்டார், அவர் தான் கரெக்ட் – மீண்டும் வன்மத்தை காட்டிய ஹர்பஜன், ரசிகர்கள் மாஸ் பதிலடி

அவர் கூறுவது இந்த 5 வீரர்களுமே தங்களது ஐபிஎல் அணிகளில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களாக செயல்பட்டு வருகிறார்கள். மேலும் இந்த 5 வீரர்களுமே இந்தியாவுக்காக அறிமுகமாகி விளையாடி வருவதால் நிச்சயமாக விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற இந்த தலைமுறை வீரர்கள் ஓய்வு பெற்றதும் அடுத்த தலைமுறை நட்சத்திரங்களாக இந்திய அணிக்கு வெற்றிகளை தேடி கொடுப்பவர்களாக இருப்பார்கள் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement