- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2023 உலககோப்பை : 15 பேர் கொண்ட தனது இந்திய அணியை அறிவித்த சவுரவ் கங்குலி – லிஸ்ட் இதோ

இந்தியாவில் இந்த ஆண்டிற்கான ஐ.சி.சி யின் 2023 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் துவங்க இருக்கிறது. மொத்தம் பத்து நகரங்களில் 40-க்கும் மேற்பட்ட போட்டிகள் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன. இந்த தொடருக்கான அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள வேளையில் தற்போது இந்த உலகக் கோப்பை தொடரின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை தொட்டுள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடரானது துவங்க இன்னும் குறுகிய இடைவெளியே உள்ள வேளையில் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்னும் ஒரு வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

- Advertisement -

அதே வேளையில் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி இலங்கை மற்றும் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களே பெரும்பாலும் உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம் பிடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடருக்காக பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ-யின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி இந்த உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை கணித்து அவரது விருப்பப்படி ஒரு அணியை வெளியிட்டுள்ளார். இப்படி கங்குலி வெளியிட்டுள்ள அந்த இந்திய அணி வீரர்கள் குறித்த விவரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் கங்குலி தேர்வு செய்துள்ள அந்த 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் இதோ :

இதையும் படிங்க : ஆசிய கோப்பை 2023 : செலக்சன் பாலிசி இல்லையா? அகர்கர் ரொம்ப குழம்பிட்டாரு போல, இத்தனை பவுலர்கள் எதுக்கு – ஸ்ரீகாந்த் அதிருப்தி

1) ரோஹித் சர்மா (கேப்டன்), 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) இஷான் கிஷன், 7) சூரியகுமார் யாதவ், 8) ஹார்டிக் பாண்டியா, 9) ரவீந்திர ஜடேஜா, 10) அக்சர் படேல், 11) குல்தீப் யாதவ், 12) முகமது சிராஜ், 13) ஷர்துல் தாகூர், 14) ஜஸ்ப்ரீத் பும்ரா, 15) முகமது ஷமி.

- Advertisement -
Published by