ஆசிய கோப்பை 2023 : செலக்சன் பாலிசி இல்லையா? அகர்கர் ரொம்ப குழம்பிட்டாரு போல, இத்தனை பவுலர்கள் எதுக்கு – ஸ்ரீகாந்த் அதிருப்தி

- Advertisement -

ஆசிய கண்டத்தின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஆசிய கோப்பை வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்குகிறது. 2023 உலகக்கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் 50 ஓவர் போட்டிகளாக நடக்கும் இந்த தொடரில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பையில் விளையாட போகும் இறுதிக்கட்ட 15 வீரர்களை தேர்வு செய்வதற்கு உதவும் இந்த தொடரில் காயத்தை சந்தித்திருந்த கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது ரசிகர்களுக்கு நிம்மதியாக அமைந்தது.

Asia Cup INDIA

- Advertisement -

ஆனாலும் அதில் கேஎல் ராகுல் பயிற்சிகளை மேற்கொள்ளும் போது புதிதாக லேசான காயத்தை சந்தித்துள்ளதால் ஆசிய கோப்பை தொடரின் ஆரம்பக்கட்ட போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவித்த புதிய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் அந்த நிலைமையை சரி செய்வதற்காகவே சஞ்சு சாம்சன் பேக்-அப் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெளிவுப்படுத்தினார். மேலும் உலகக் கோப்பைக்கு முன் அவர் முழுமையாக குணமடைந்து விடுவார் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஸ்ரீகாந்த் விமர்சனம்:
இருப்பினும் ஏற்கனவே தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி சுமாரான ஃபார்மில் இருந்த அவர் முழுமையாக குணமடைந்து எவ்விதமான போட்டிகளிலும் விளையாடாமல் நேரடியாக உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரில் விளையாட வேண்டிய அவசியம் என்ன என கபில் தேவ், மதன் லால் போன்ற நிறைய முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் காயமடைந்துள்ள வீரரை தேர்வு செய்யக்கூடாது என்பது போன்ற அடிப்படையான கொள்கையை கூட அஜித் அகர்கர் பின்பற்றவில்லை என்று 2011 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியை தேர்வு செய்த முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார்.

Ajit-Agarkar

மேலும் ஆசிய கோப்பையில் தேவையின்றி நிறைய மித வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிருப்தியை வெளிப்படுத்தும் அவர் காயத்திலிருந்து குணமடைந்த பிரசித் கிருஷ்ணா அயர்லாந்து தொடரில் அசத்தினார் என்பதற்காக ஆசிய கோப்பையில் நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “உங்களுக்கு ஏன் இத்தனை மித வேகப்பந்து வீச்சாளர்கள் தேவைப்படுகிறார்கள்? மேலும் தேர்வு குழுவினருக்கு யார் ஃபிட்டாக இருக்கிறார்கள் யார் ஃபிட்டாக இல்லை என்ற ஐடியா இல்லை”

- Advertisement -

“குறிப்பாக ராகுல் லேசான காயத்தை சந்தித்திருந்தால் அவரை நீங்கள் தேர்வு செய்திருக்கக் கூடாது. தேர்வுக்குழு தலைவராக என்னுடைய கொள்கை என்னவெனில் தேர்வு செய்யும் நாளில் ஒருவர் ஃபிட்டாக இல்லையெனில் அவரை தேர்வு செய்ய மாட்டேன். அவரை நீங்கள் உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்ய விரும்புகிறீர்களா? சரி அதை செய்யுங்கள். ஆனால் ஆசிய கோப்பை 2 போட்டிகளுக்கு பின் அவர் விளையாடுவார் என்று நம்பிக்கையுடன் நீங்கள் அதை செய்கிறீர்களா? இந்த வகையில் அஜித் அகர்கர் தலைமையிலான குழுவினர் குழப்பமடைந்துள்ளார்கள் என்று கருதுகிறேன்”

Kris-Srikkanth

இதையும் படிங்க:

“அதாவது ஒருவரைப் பற்றி உறுதியாக தெரியவில்லை என்றால் தேர்வு செய்யாதீர்கள். மேலும் பிரசித் கிருஷ்ணாவை பாருங்கள். கடந்த ஒரு வருடமாக விளையாடாமல் இருந்த அவர் அயர்லாந்தில் 4 ஓவர்கள் வீசியதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது சரியா? எனவே இந்த தேர்வு கொள்கை பாதுகாப்பாக இல்லை. இனியாவது நம்பிக்கையான கொள்கையை எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்.

Advertisement