- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணியின் பயிற்சியாளராக நான் ரெடி.. கம்பீருக்கு அந்த சீரிஸ் சவாலா இருக்கும்.. கங்குலி அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் கடந்த வருடம் முதல் செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் இலங்கைக்கு எதிராக 27 வருடங்கள் கழித்து ஒருநாள் தொடரில் தோற்ற இந்தியா சொந்த மண்ணில் வரலாற்றிலேயே முதல் முறையாக இங்கிலாந்திடம் ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அத்துடன் 12 வருடங்கள் கழித்து இந்தியா சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்றது.

2014க்குப்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பார்டர் – கவாஸ்கர் தொடரில் தோல்வியுற்ற இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியது. அதனால் கோபமடைந்த ரசிகர்களுக்கு 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்தியா வென்றது ஆறுதலாக அமைந்தது. அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது.

- Advertisement -

பயிற்சயாளராக தயார்:

இங்கிருந்து 2027 உலகக் கோப்பை வரை கௌதம் கம்பீர் இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக வர தாம் தயாராக இருப்பதாக ஜாம்பவான் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய போது கேப்டனாக பொறுப்பேற்ற கங்குலி இன்றிருக்கும் வளமான இந்திய அணியை வடிவமைத்தவர் என்றே சொல்லலாம்.

அப்படிப்பட்ட அவர் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படுவது பற்றி நான் அதிகம் சிந்தித்ததில்லை. ஏனெனில் இதற்கு முன் நிறைய பொறுப்புகளில் இருந்தேன். 2013இல் கேரியரை முடித்த நான் பிசிசிஐ தலைவராக வந்தேன். இங்கிருந்து வருங்காலம் எதை வைத்திருக்கிறது என்பதைப் பார்க்கலாம்”

- Advertisement -

கங்குலி அறிவிப்பு:

“தற்போது எனக்கு 50 வயது மட்டுமே ஆகிறது. எனவே என்ன நடக்கும் என்பதைப் பார்க்கலாம். அந்த வேலையை செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். அது எங்கே செல்கிறது என்பதைப் பார்ப்போம். கௌதம் கம்பீர் கொஞ்சம் மெதுவாகத் துவங்கியுள்ளார். நியூசிலாந்து, ஆஸ்திரேலிய தொடர்களில் தோற்ற அவர் சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றார்”

இதையும் படிங்க: டாஸ் மறந்து மாத்தி சொல்லிட்டு.. கும்ப்ளேவிடம் பொய் சொன்னேன்.. 2013 சொதப்பல் பற்றி ரோஹித் பேட்டி

“மிகவும் ஆர்வமிக்க அவரைப் பற்றி எனக்குத் தெரியாது. ஏனெனில் பயிற்சியாளராக அவருடன் நான் வேலை செய்ததில்லை. இந்தியாவுக்காக சேர்ந்து விளையாடிய போது அவர் சிறப்பாகவே செயல்பட்டார். தற்போது அவர் அணி, வீரர்கள் பற்றி அனைத்தையும் வெளிப்படையாக பேசுவதைப் பார்க்க முடிகிறது. தற்போதைய இங்கிலாந்து தொடர் அவருக்கு பெரிய சவாலாக இருக்கும். ஆனால் அனைவரையும் போல அவரும் கற்றுக்கொண்டு முன்னேறுவார். அவருக்கு வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

- Advertisement -