இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய ஐசிசி கோப்பைகளை கேப்டனாக வென்ற அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்துள்ளார். அதே போல ஐபிஎல் தொடரிலும் தோனிக்கு முன்பே 5 கோப்பைகளை வென்ற அவர் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.
அப்படிப்பட்ட ரோஹித் சர்மா நியாபக மறதியால் பணப் பை, கடிகாரம், அலைபேசி உள்ளிட்ட பல விஷயங்களை மறந்து விடுவார் என்று விராட் கோலி 2017ஆம் ஆண்டு கொடுத்த ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்திய கிரிக்கெட் அணியில் இருப்பதிலேயே ரோகித் சர்மா தான் அடிக்கடி மறக்கக் கூடியவர் என்றும் விராட் கோலி கூறியிருந்தார். அதை ஒரு முறை நேரலையில் ரோகித் சர்மா நிரூபித்தார்.
மறதயின் உச்சம்:
ஆம் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடியது. அத்தொடரின் ஒரு போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா பேட்டிங் செய்ய வேண்டுமா அல்லது பவுலிங் செய்ய வேண்டுமா என்பதை மறந்து விட்டார். அதனால் தம்முடைய தலையில் கையை வைத்து தேய்த்த ரோகித் ஒரு நிமிடத்திற்கு மேல் வடிவேலு போல யோசித்தார்.
இறுதியாக தன்னுடைய முடிவை அறிவித்த ரோகித் சர்மாவை அருகிலிருந்து பார்த்த நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் சிரித்ததை மறக்க முடியாது. இந்நிலையில் 2013 சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் ஒரு போட்டியில் டாஸ் வென்று மறந்து போய் தவறுதலாக பேட்டிங் செய்கிறோம் என்று அறிவித்ததாக ரோஹித் தெரிவித்துள்ளார். பின்னர் அந்த தவறான முடிவை ஏன் எடுத்தீர்கள்? என்று மும்பை அணியின் ஆலோசகர் அனில் கும்ப்ளே தன்னிடம் கேட்டதாகவும் ரோகித் கூறியுள்ளார்.
ரோஹித் கலகலப்பு:
அப்போது பொய் சொல்லி அவரை சமாளித்தது பற்றி சமீபத்திய யூடியூப் பேட்டியில் ரோஹித் பேசியது பின்வருமாறு. “இந்த நிகழ்வு 2023 சாம்பியன்ஸ் லீக் தொடரில் நடைபெற்றது. ஒரு போட்டியில் டாஸ் வென்ற நாங்கள் பௌலிங் செய்வதாக தீர்மானித்திருந்தோம். ஆனால் டாஸ் வென்ற நான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தேன்”
இதையும் படிங்க: இப்படி ஒரு வீரரை அவமான படுத்தக்கூடாது.. கேப்டன் சுப்மன் கில் செய்த தவறை – சுட்டிக்காட்டிய தினேஷ் கார்த்திக்
“அதனால் ரோகித் நீ என்ன செய்துள்ளாய்? என்று அனில் பாய் கேட்டார். அதற்கு “அனில் பாய் பிட்ச் பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருப்பது போல் தெரிவதால் முடிவை மாற்றி விட்டேன்” என்று அவரிடம் சொன்னேன். ஆனால் உண்மையில் டாஸ் வெல்லும் போது பவுலிங் செய்ய வேண்டும் என்பதை நான் மறந்து விட்டேன். நல்ல வேளையாக அந்தப் போட்டியில் நாங்கள் வென்றோம்” என்று கூறினார்.



