வருங்காலம் முக்கியமில்லையா – விராட் கோலி, ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட்டில் விளையாட தகுதியற்றவர்களா? கங்குலி பதில் இதோ

Sourav Ganguly
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளது. அதில் முதலாவதாக நடைபெறும் டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரை தேர்ந்தெடுத்தது நிறைய விமர்சனங்கள் ஏற்படுத்தியது. குறிப்பாக பலவீனமாக இருக்கும் வெஸ்ட் இண்டீஸை அடித்து நொறுக்க இளம் அணி போதாதா என்ற கேள்வி எழுப்பிய சுனில் கவாஸ்கர் 2023 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு சீனியர்களுக்கு ஓய்வளித்திருக்கலாம் என விமர்சித்தார். அந்த நிலையில் இந்த சுற்றுப்பயணத்தில் கடைசியாக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

India Virat Kohli Rohit Sharma Bhuvanewar Kumar Dinesh Karthik

- Advertisement -

இருப்பினும் அந்த தொடரில் 2023 உலகக் கோப்பையில் புத்துணர்ச்சியுடன் களமிறங்குவதற்காக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய சீனியர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் ஜெய்ஸ்வால், திலக் வர்மா போன்ற இளம் வீரர்களை கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சொல்லப்போனால் ஒரு காலத்தில் ஹிட்மேன் என்ற பெயருடன் எதிரணிகளைப் பந்தாடிய ரோகித் சர்மா சமீப காலங்களாகவே தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி ஐபிஎல் 2023 தொடரில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனை படைத்தார்.

கங்குலி கருத்து:
குறிப்பாக 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் சுமாராகவே செயல்பட்ட அவர் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதன் காரணமாக 2024 டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை உருவாக்கும் வேலையை பிசிசிஐ தொடங்கியுள்ளது. மறுபுறம் 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்து வந்த மோசமான கதைக்கு கடந்த ஆசிய கோப்பையில் முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி 2022 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸ் விளையாடி மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுத்து அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்தார்.

மேலும் ஐபிஎல் 2023 தொடரிலும் மிகச் சிறப்பாக செயல்பட்ட அவர் இப்போதும் தன்னுடைய தரத்திற்கு நிகராகவே செயல்பட்டு வருகிறார். இருப்பினும் 2022 டி20 உலக கோப்பைக்கு பின் ரோஹித் – விராட் ஆகிய இருவருமே இதுவரை ஒரு டி20 போட்டியில் கூட விளையாடாமல் இருந்து வருகின்றனர். அதனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்களை நோக்கி பிசிசிஐ நகர்ந்துள்ளதால் அவர்களுடைய டி20 கேரியர் முடிந்ததாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஆனாலும் அதில் ரோகித் சர்மாவை வேண்டுமானால் கழற்றி விடுங்கள் ஆனால் விராட் கோலி நிச்சயம் விளையாட வேண்டும் என்று பெரும்பாலான ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா உட்பட வெற்றியை பெற்றுக் கொடுக்கக்கூடிய யாராக இருந்தாலும் இந்தியாவுக்கு விளையாடலாம் என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

Ganguly

“எப்போதுமே உங்களுடைய சிறந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். மாறாக அது யார் என்று பார்த்து தேர்வு செய்யக் கூடாது. எனவே என்னை பொறுத்த வரை விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தகுதியுடையவர்கள். அவர்களுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்பதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. குறிப்பாக விராட் கோலி ஐபிஎல் தொடரில் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். எனவே என்னை நீங்கள் கேட்டால் அந்த இருவருக்குமே டி20 அணியில் இடம் இருக்கிறது என்றே நான் சொல்வேன்” என கூறினார்.

இதையும் படிங்க:பெரிய மனுஷன் பண்ற வேலையா இது? ஸ்டுவர்ட் ப்ராட் தந்தையை கண்டித்த ஐசிசி – நடந்தது என்ன?

அது மட்டுமல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் வாய்ப்பு பெறாத ரிங்கு சிங், ருதுராஜ் போன்றவர்களுக்கு விரைவில் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு. “அவர்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். குறிப்பாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அசத்த வேண்டும். இருப்பினும் 15 பேர் மட்டும் தேர்வு செய்யக்கூடிய அணியில் 11 பேர் மட்டுமே விளையாட முடியும். அதனால் சிலருக்கு வாய்ப்பு கிடைக்காதது சகஜமாகும். ஆனாலும் அவர்களுக்கான நேரம் வரும் என்பதை நான் உறுதியாக சொல்வேன்” என கூறினார்.

Advertisement