பெரிய மனுஷன் பண்ற வேலையா இது? ஸ்டுவர்ட் ப்ராட் தந்தையை கண்டித்த ஐசிசி – நடந்தது என்ன?

Chris broad 1
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே வலுவான முன்னிலை பெற்று தங்களை உலக சாம்பியன் என்பதே நிரூபித்தது. மறுபுறம் அதிரடியாக விளையாடுகிறோம் என்ற பெயரில் கையில் வைத்திருந்த வெற்றிகளை கோட்டை விட்ட இங்கிலாந்து சொந்த மண்ணில் தலைகுனியும் தோல்விகளை சந்தித்தது. அந்த நிலையில் ஜூன் 7ஆம் தேதி ஹெண்டிங்லே நகரில் துவங்கிய வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 263 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ் சதமடித்து 118 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து மீண்டும் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி 237 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் போராடி 80 ரன்கள் குவிக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 6 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து 26 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா மீண்டும் தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 224 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

கண்டித்த ஐசிசி:
அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 77 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் மற்றும் ஸ்டுவர்ட் ப்ராட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளுக்கு சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 251 என்ற இலக்கை துரத்தும் இங்கிலாந்து 3வது நாள் முடிவில் 27/0 என்ற ஸ்கோருடன் விளையாடி வரும் நிலையில் களத்தில் ஜாக் கிராவ்லி 9*, பென் டூக்கெட் 18* ரன்களுடன் உள்ளனர். பொதுவாக கிரிக்கெட்டில் சில நட்சத்திர வீரர்கள் ஏதேனும் ஒரு சில பவுலர்களுக்கு எதிராக பெட்டி பாம்பாக அடங்கி அடிக்கடி அவுட்டாவது வழக்கமாகும்.

அந்த வகையில் ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னர் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராடுக்கு எதிராக 13க்கும் மேற்பட்ட முறை அவுட்டாகியிருந்தார். அதனால் தன்னுடைய கடைசி ஆஷஸ் என்று எதிர்பார்க்கப்படும் இந்த தொடரில் அவருக்கு டேவிட் வார்னர் பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் போட்டியிலேயே அவரிடம் அவுட்டான வார்னர் 2வது போட்டியிலும் ஒரு முறை அவுட்டாகி எந்த மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் காணாமலேயே ஏமாற்றத்துடன் சென்றார்.

- Advertisement -

அதனால் வழக்கம் போல பிராட் பாக்கெட்டில் டேவிட் வார்னர் இருப்பதாக இங்கிலாந்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தாறுமாறாக கலாய்த்தனர். அந்த நிலைமையில் துவங்கிய இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் அவரிடமே 4 ரன்களில் அவுட்டான வார்னர் 2வது இன்னிங்சிலும் வெறும் 1 ரன்னில் அதே போல் அவுட்டாகி “என்ன செய்தாலும் இவரிடம் சிக்குவதை தவிர்க்க முடியவில்லையே” என்ற ஏமாற்றம் கலந்த சிரிப்புடன் மனவேதனையுடன் திரும்பினார். அதை தொடர்ந்து வழக்கம் போல இங்கிலாந்தை சேர்ந்தவர்களும் இதர ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வார்னரை கலாய்த்தனர்.

இருப்பினும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு முன்னாள் இங்கிலாந்து வீரர் மற்றும் ஸ்டுவர்ட் பிராட் தந்தை கிறிஸ் ப்ராடும் ட்விட்டரில் கலாய்த்தார். குறிப்பாக பிரபல கார்ட்டூன் நாடகத்தில் வரும் ஒரு கேரக்டரின் தலைக்கு பதிலாக வார்னர் தலையை வைத்து கரும்பலகையில் “ஸ்டுவர்ட் ப்ராட் என்னை அவுட்டாக்கி விட்டார்” என பலமுறை டேவிட் வார்னர் சோகத்துடன் எழுதுவது போன்ற கேளிக்கையான சித்திரத்தை கிறிஸ் ப்ராட் ட்விட்டரில் பதிவிட்டு வெளிப்படையாக கலாய்த்தார்.

- Advertisement -

ஆனால் ஓய்வுக்கு பின் கடந்த பல வருடங்களாக நடுவராக இருந்து வரும் அவர் இத்தொடரில் இல்லையென்றாலும் தற்போதும் ஐசிசி நடுவர்களில் ஒருவராக இருக்கிறார். அதனால் நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டிய அவர் தம்முடைய மகனை உயர்த்துவதற்காக வார்னரை இப்படி சாதாரண ரசிகரை போல கலாய்த்தது ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்களை அதிருப்தியடைய வைத்தது. அந்த நிலையில் அந்த குறிப்பிட்ட ட்வீட் வைரலாகி ஐசிசியின் பார்வைக்கும் சென்றுள்ளது.

இதையும் படிங்க:50 ஓவர் உலகக்கோப்பை செமி பைனல்ல இந்த 2 அணிகள் மோதுனா ரசிகர்களுக்கு ட்ரீட் தான் – கங்குலி விருப்பம்

அதை கவனித்த ஐசிசி நடுவராக இருந்து கொண்டு நடுநிலைமையுடன் இல்லாமல் இப்படி செயல்படலாமா? என்று அவரை கண்டித்ததாக விஸ்டன் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. அதனால் அந்த ட்விட்டை தற்போது கிறிஸ் ப்ராட் மொத்தமாக டெலிட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement