- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இவர் தான் இந்தியாவின் புதிய ஷமி.. கில் ஏன் 50 வெச்சுருக்கலன்னு ஆச்சர்யப்படுவீங்க.. கங்குலி பாராட்டு

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்தை இரண்டாவது போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் 1 – 1* என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ள இந்திய அணியின் வெற்றிக்கு கேப்டன் சுப்மன் கில் 269, 161 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அதே போல பவுலிங் துறையில் பும்ராவுக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகளை எடுத்து அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக அசத்தினார். இந்நிலையில் 2025 இங்கிலாந்து தொடர் சுப்மன் கில்லை அடுத்த நீண்ட கால கேப்டனாக தீர்மானிக்கும் என்று ஜாம்பவான் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். அத்துடன் சுப்மன் கில் பேட்டிங் சராசரி ஏன் 50க்கு கீழே இருக்கிறது என்று அனைவரும் வியக்கும் அளவுக்கு அவருடைய பேட்டிங் அபாரமாக இருப்பதாகவும் கங்குலி பாராட்டியுள்ளார்.

- Advertisement -

கங்குலி பாராட்டு:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சுப்மன் கனவில் விளையாடுவது போல் பேட்டிங் செய்கிறார். என்னுடைய ட்விட்டை பார்த்தால் அனைத்தும் உங்களுக்குத் தெரியும். இங்கிலாந்தில் கிரிக்கெட்டை விளையாடி பார்த்த என்னுடைய 3 வருட தசாப்த அனுபவத்தில் அவருடைய பேட்டிங் மிகவும் சிறந்தது. எந்த குறைபாடுகளும் இல்லாமல் விளையாடும் அவரை இங்கிலாந்து பவுலர்கள் எளிதில் அவுட்டாக்குவது போல் தெரியவில்லை”

“அந்தளவுக்கு கில் ஒரு தவறைக் கூட செய்யவில்லை. பார்க்க அழகாக விளையாடும் அவர் பசி மற்றும் பொறுமையைக் கொண்டுள்ளார். அவருடைய ஆட்டத்தைப் பார்த்த உங்களுக்கு இப்போது ஏன் சுப்மன் பேட்டிங் சராசரி 50க்கும் குறைவாக இருக்கிறது? என்று ஆச்சரியமாக இருக்கும். இத்தொடரில் அவர் சதத்தையும் தாண்டி இரட்டை சதமடிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் விளையாடுவதை பார்ப்பது சிறப்பாக இருக்கிறது”

- Advertisement -

இந்தியாவின் புதிய ஷமி:

“இந்தத் தொடர் சுப்மன் கில்லை கேப்டனாக தீர்மானிக்கும்” என்று கூறினார். அத்துடன் ஆகாஷ் தீப் புதிய முகமது ஷமி போலவே செயல்படுவதாக பாராட்டிய கங்குலி தொடர்ந்து பேசியது பின்வருமாறு. “அவர் ஷமி போல இருக்கிறார் அல்லவா? அவர் வெள்ளைக்கோட்டை பயன்படுத்தி ஸ்விங்கை பெறும் விதம் சிறப்பாக இருக்கிறது”

இதையும் படிங்க: எட்ஜ்பேஸ்டன் டெஸ்ட் போட்டியில் இதுதான் மறக்க முடியாத ஸ்பெஷல் முமென்ட்.. சிராஜை பாராட்டிய – சுப்மன் கில்

“அவர் முகமது ஷமியை எனக்கு சிறந்த முறையில் நினைவுபடுத்துகிறார். ஜோ ரூட்டை அவுட்டாக்கிய அவருடைய பந்து உலகின் எந்த பேட்ஸ்மேனையும் அவுட்டாக்கும். தற்போது நிறைய தன்னம்பிக்கையைப் பெற்றுள்ள அவருக்கு ஜோடியாக அடுத்தப் போட்டியில் பும்ரா வருகிறார். எனவே இந்தியாவால் தொடர்ந்து 20 விக்கெட்டுகள் எடுக்க முடியும். நம்மிடம் போதுமானதாக இருக்கும் மற்ற பவுலர்கள் பயன்படுத்தி பும்ராவை சோர்வடையாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். இத்தொடர் நன்றாக செட்டாகியுள்ளது. முதல் போட்டியும் நாம் வென்றருக்க வேண்டிய போட்டியாகும்” என்று கூறினார்.

- Advertisement -