IPL 2023 : இங்கிலிஷ் தெரியாம என்னை குறை சொல்லி திட்டாதீங்க, ரசிகர்களுக்கு கங்குலி பதிலடி – நடந்தது என்ன

Ganguly-3
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் லீக் சுற்று முடிந்து பிளே ஆப் சுற்று நடைபெற்று வருகிறது. இத்தொடரில் முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மீண்டும் லீக் சுற்றுடன் வெளியேறியது. குறிப்பாக நடப்பு சாம்பியன் குஜராத்துக்கு எதிரான கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் தோல்வியை சந்தித்த அந்த அணி வரலாற்றில் 16வது முறையாக கோப்பை வெல்ல முடியாமல் வெளியேறியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூருவுக்கு இதர வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் தனி ஒருவனாக போராடிய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சதமடித்து 101* (61) ரன்கள் விளாசினார்.

அதைத்தொடர்ந்து 198 ரன்களை துரத்திய குஜராத்துக்கு சிறப்பாக செயல்பட்ட சுப்மன் கில் சதமடித்து 104* (52) ரன்களை விளாசி பெங்களூருவின் வெற்றியை உடைத்து மும்பை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற உதவினார். இருப்பினும் விரைவில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்பாக இந்திய கிரிக்கெட்டின் தற்போதைய முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலியும் வருங்காலமாக பார்க்கப்படும் சுப்மன் கில்லும் ஒரே போட்டியில் சதமடித்தது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

- Advertisement -

கங்குலி பதிலடி:
அதனால் ஏராளமான முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் அந்த இருவரையும் ஜோடியாக பாராட்டினர். ஆனால் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி மட்டும் சுப்மன் கில்லை ட்விட்டரை பாராட்டிய போதிலும் விராட் கோலியின் பெயரை குறிப்பிடவில்லை. ஆனால் ஏமாற்றமடைந்த விராட் கோலி ரசிகர்கள் பழைய பகையை மனதுக்குள் வைத்துக்கொண்டு தான் பாராட்ட மனமில்லாமல் வன்மத்தை காட்டியதாக அவரை விமர்சித்தனர். அத்துடன் அன்றைய நாளில் மதியம் நடைபெற்ற ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் கேமரூன் கிரீன் சதமடித்து மும்பையை வெற்றி பெற வைத்தார்.

அதனால் அவரையும் கில்லையும் சேர்த்து “2 சிறந்த இன்னிங்ஸ்” என்று பாராட்டிய நீங்கள் விராட் கோலியின் பெயரைக் கூட குறிப்பிடாதது ஏன்? என்றும் நிறைய ரசிகர்கள் விமர்சித்தனர். அத்துடன் அன்றைய நாளில் சதமடித்த அந்த 3 பேரின் புகைப்படத்தையும் ட்விட்டரில் பதிவிட்டு பாராட்டிய உங்களுடைய நண்பர் சச்சினை பார்த்து கற்றுக் கொள்ளுமாறும் விராட் கோலி ரசிகர்கள் கங்குலியை விமர்சித்தனர். முன்னதாக உலகக் கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்பதால் டி20 கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்த விராட் கோலி ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்வதாக அறிவித்தார்.

- Advertisement -

இருப்பினும் கங்குலி தலைமையிலான பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு 2 வெவ்வேறு கேப்டன்கள் தேவையில்லை என்ற கருத்துடன் அவரின் ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியை வலுக்கட்டாயமாக பறித்து ரோகித் சர்மாவிடம் ஒப்படைத்தது. அதனால் மனமுடைந்த விராட் கோலி டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்ததால் அதற்கு சௌரவ் கங்குலி தான் காரணம் என்று அவருடைய ரசிகர்கள் விமர்சித்தனர்.

அதை கடந்த சில மாதங்களுக்கு முன் பிரபல தொலைக்காட்சியின் ரகசிய கேமராவில் சிக்கிய முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா உறுதி செய்தார். மேலும் இந்த ஐபிஎல் தொடரில் முதல் முறை சந்தித்துக் கொண்ட போது இருவருமே முறைத்துக் கொண்டு கை கொடுத்து கொள்ளாதது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் 2வது முறை கை கொடுத்துக் கொண்டதால் இருவரும் பகையை மறந்து விட்டார்கள் என்று அனைவரும் நினைத்தாலும் கங்குலியின் இந்த ட்வீட் மீண்டும் சர்ச்சை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:IPL 2023 : பிளே ஆப் போட்டியில் நேற்று மும்பை அணி படைத்த அசத்தலான சாதனை – என்ன தெரியுமா?

இந்நிலையில் ஆங்கிலம் சரியாக தெரியாமல் அந்த ட்வீட்டை தவறாக படித்து விட்டு தம்மை தேவையின்றி இல்லாததை சம்பந்தப்படுத்தி குறை சொல்ல வேண்டாமென கங்குலி பதிலடி கொடுத்துள்ளார். அதாவது ஆரம்பத்தில் போட்ட ட்விட்டில் “இந்த நாடு உருவாக்கிய திறமை” என்று கங்குலி தெளிவாக கூறியுள்ளார். இந்த நாட்டை சேர்ந்த திறமை என்பது இந்தியாவை சேர்ந்த சுப்மன் கில், விராட் கோலி என்பது அர்த்தமாகும். அப்படி தாம் குறிப்பிட்ட ஆங்கிலத்தை சரியாக புரிந்து கொள்ளாதவர்களுக்கு யாராவது புரிய வையுங்கள் என்று கங்குலி விராட் கோலி ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement