IPL 2023 : பிளே ஆப் போட்டியில் நேற்று மும்பை அணி படைத்த அசத்தலான சாதனை – என்ன தெரியுமா?

Naveen-ul-Haq
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், க்ருனால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ரோகித் சர்மா தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

MI vs LSG

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. மும்பை அணி சார்பாக கேமரூன் கிரீன் 41 ரன்களையும் திலக் வர்மா 26 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 33 ரன்களையும் குவித்தனர்.

பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே குவித்ததால் மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Cameron Green

இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை அணி அசத்தலான ஒரு சாதனையையும் பிளே ஆப் போட்டிகளில் நிகழ்த்தி அசத்தியுள்ளது. அந்த வகையில் பிளே ஆப் சுற்று போட்டிகளில் ஒரு வீரர் கூட 50 ரன்கள் அடிக்காமல் மும்பை அணி அடித்த அதிகபட்ச ஸ்கோராக இந்த 182 ரன்கள் பதிவாகியுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : IPL 2023 : தோனி ஓய்வுக்கு பின் சிஎஸ்கே மெகா வீழ்ச்சியை சந்த்திக்க போறது கன்ஃபார்ம் – ரசிகர்களை எச்சரிக்கும் முன்னாள் ஆஸி வீரர்

இந்த போட்டியில் மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 41 ரன்கள் குவித்து இருந்தார். அவரை தவிர்த்து களமிறங்கிய அனைத்து பேட்ஸ்மேன்களும் கணிசமான ரன்களை அடிக்க மும்பை இந்தியன்ஸ் அணி 182 ரன்கள் என்கிற நல்ல ஸ்கோரை எட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement