IPL 2023 : தோனி ஓய்வுக்கு பின் சிஎஸ்கே மெகா வீழ்ச்சியை சந்த்திக்க போறது கன்ஃபார்ம் – ரசிகர்களை எச்சரிக்கும் முன்னாள் ஆஸி வீரர்

Dhoni
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் லீக் சுற்றில் தேவையான வெற்றிகளை பெற்று 2வது அணியாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. முன்னதாக 2008இல் ஐபிஎல் துவங்கப்பட்ட போது மும்பைக்கு சச்சின், கொல்கத்தாவுக்கு கங்குலி போன்ற ஜாம்பவான்கள் கேப்டனாக இருந்த நிலையில் தமிழகத்தில் அவ்வாறு அந்த சமயத்தில் ஒரு வீரர் இல்லாததால் 2007 டி20 உலக கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்த ஜார்க்கண்டை சேர்ந்த எம்எஸ் தோனி சென்னை அணிக்காக பெரிய தொகைக்கு வாங்கப்பட்டு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

- Advertisement -

அப்போது முதலே இந்தியாவைப் போலவே தன்னுடைய மிகச் சிறந்த கேப்டன்ஷிப் வாயிலாக சென்னையை தொடர்ந்து வெற்றிகரமாக வழி நடத்தும் அவர் இதுவரை பங்கேற்ற 14 சீசன்களில் 12வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்று 4 கோப்பைகளை வென்று 2வது வெற்றிகரமான அணியாக ஜொலிப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறார். மேலும் மின்னல் வேகத்தில் விக்கெட் கீப்பிங், அதிரடியான பினிஷிங், எதிரணிகளில் தடுமாறிய வீரர்களை சென்னை அணியில் அசத்த வைப்பது என பல வகைகளிலும் தோனி அந்த அணியின் ரத்தமும் சதையும் கலந்த இதயமாக செயல்பட்டு வருகிறார்.

கஷ்டப்பட போறாங்க:
அதனாலேயே இதர வீரர்களை காட்டிலும் அவரை தல என்று சென்னை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதன் காரணமாகவே 41 வயதாகும் அவர் விரைவில் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அடுத்ததாக சென்னையை வழிநடத்த போவது யார் என்ற கவலை அந்த அணி ரசிகர்களிடம் காணப்படுகிறது. சொல்லப்போனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு கடந்த வருடம் அவர் தமது கேப்டன்ஷிப் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்து சாதாரண வீரராக உறுதுணையாக விளையாடினார்.

Jadeja-1

ஆனால் உள்ளூர் கிரிக்கெட்டில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாமல் தடுமாறிய ஜடேஜா தலைமையில் ஆரம்பத்திலேயே 4 தொடர் தோல்விகளை சென்னை சந்தித்தது. அதை விட கேப்டன்ஷிப் அழுத்தத்தால் பேட்டிங், பவுலிங் என அனைத்து துறைகளிலும் தடுமாறிய ஜடேஜா மீண்டும் அந்த பதிவியை தோனியிடம் ஒப்படைத்தார். ஆனால் அதற்குள் பிளே ஆப் சுற்று வாய்ப்பு பறிபோனதுடன் புள்ளி பட்டியலில் 9வது இடம் மட்டுமே சென்னைக்கு பரிசாக கிடைத்தது. தற்போது மீண்டும் தோனி தலைமையில் கிட்டத்தட்ட அதே வீரர்களுடன் இந்த வருடம் அசத்திய சென்னை 2வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

- Advertisement -

இதிலிருந்து கேப்டனாக எந்தளவுக்கு சென்னையின் வெற்றியில் தோனி பங்காற்றுகிறார் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. இந்நிலையில் தோனியின் ஓய்வுக்கு பின் சென்னை பெரிய வீழ்ச்சியை சந்திக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மூடி தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “தோனி இல்லாதது நிச்சயமாக களத்தில் சென்னை அணியில் மிகப்பெரிய வியக்கத் தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தும். இருப்பினும் அவர் சென்னை அணியில் தொடர்ந்து ஆலோசகராக அல்லது பயிற்சியாளராக செயல்பட்டு கணிசமான பங்களிப்பை கொடுப்பார்”

“ஆனால் ஐபிஎல் வரலாற்றில் அவருடைய கேப்டன்ஷிப் என்பது அடிக்கடி டாப் 4 இடத்தை பிடிக்காத அணிகளை விட சென்னை அணியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை பார்த்துள்ளோம். குறிப்பாக கடந்த வருடம் ஜடேஜா கேப்டன்ஷிப் பொறுப்பேற்ற போது திடீரென நமக்கு அந்த அணி அதே பழைய சிஎஸ்கே என்ற உணர்வை கொடுக்கவில்லை. தோனி தலைமையில் தான் அந்த அணியின் கலாச்சாரம் செட்டாகியுள்ளது. இருப்பினும் அடுத்ததாக வரும் புதிய கேப்டன் களத்தில் சற்று வித்தியாசமான முடிவுகளை எடுக்கலாம். ஆனால் சென்னை அணியில் எந்த ஒரு கேப்டனும் திடீரென அடிக்கடி மாற்றங்களை நிகழ்த்துபவராக இருக்க மாட்டார்” என்று கூறினார்.

இதையும் படிங்க:மும்பை இந்தியன்ஸ் அணியில் மட்டுமல்ல சீக்கிரம் இந்த 2 பசங்களும் இந்திய அணியிலும் சாதிப்பாங்க – ரோஹித் நம்பிக்கை

முன்னதாக கங்குலி, பாண்டிங் போன்ற ஜாம்பவான்கள் பயிற்சியாளராக செயல்பட்டும் டெல்லியால் வெற்றி காண முடியவில்லை. அது போல ஓய்வுக்கு பின் என்ன தான் தோனி பயிற்சியாளராக இருந்தாலும் கேப்டனாக ஏற்படுத்தக்கூடிய தாக்கம் சென்னை அணியில் ஏற்படுத்த முடியாது என்றே சொல்லலாம்.

Advertisement