மும்பை இந்தியன்ஸ் அணியில் மட்டுமல்ல சீக்கிரம் இந்த 2 பசங்களும் இந்திய அணியிலும் சாதிப்பாங்க – ரோஹித் நம்பிக்கை

Rohith
Advertisement

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முக்கியமான எலிமினேட்டர் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பிடித்திருந்த லக்னோ மற்றும் மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்ததாக இரண்டாவது குவாலிபயர் போட்டியில் குஜராத் அணியுடன் விளையாடும் என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியில் உச்சத்தை தொட்டிருந்தது.

Akash Madhwal

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது மும்பை அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பெற்றது.

Nehal Wadhera 1

அதோடு அடுத்ததாக அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது குவாலிஃபயர் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய மும்பை அணியின் இளம் வீரர்கள் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக பந்துவீச்சில் ஆகாஷ் மத்வால் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோன்று பேட்டிங்கில் பின்வரிசையில் திலக் வர்மா மற்றும் நேஹல் வதேரா போன்ற வீரர்களும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னரே ரோகித் சர்மா பேசும்போது : பும்ரா, ஹார்டிக் பாண்டியா போன்ற வீரர்கள் சென்ற உயரத்திற்கு திலக் வர்மா மற்றும் நேஹல் வதேரா ஆகியோர் செல்வார்கள் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து ரோஹித் சர்மா கூறுகையில் :
எங்கள் அணியில் இடம் பெற்றிருந்த பும்ரா, ஹார்டிக் பாண்டியா, க்ருனால் பாண்டியா போன்ற வீரர்கள் எவ்வாறு முன்னேற்றம் அடைந்தார்களோ அதே போன்று திலக் வர்மா நேஹல் வதேரா ஆகியோரின் வளர்ச்சியும் இருக்கப் போகிறது.

இதையும் படிங்க : IPL 2023 : வளத்து விட்ட எங்களோட நன்றிய மறந்துடுறாங்க, பாண்டியாவை மறைமுகமாக தாக்கிய ரோஹித் சர்மா – நடந்தது என்ன

இந்த இரண்டு வீரர்களும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டுமின்றி இந்திய அணிக்காகவும் பெரிய நட்சத்திரங்களாக மாறுவார்கள். நிச்சயம் ஒருநாள் அது நடக்கும் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement