IPL 2023 : வளத்து விட்ட எங்களோட நன்றிய மறந்துடுறாங்க, பாண்டியாவை மறைமுகமாக தாக்கிய ரோஹித் சர்மா – நடந்தது என்ன

- Advertisement -

இறுதி கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் ஆரம்பத்திலேயே சில தோல்விகளை சந்தித்ததால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாது என்று நிறைய விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக பும்ரா, ஆர்ச்சர் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாததால் பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கிய அந்த அணி லீக் சுற்றுடன் வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் கடப்பாரை பேட்டிங்கை வைத்து 2வது பகுதியில் பொதித்தெழுந்து புள்ளி பட்டியலில் 4வது இடம் பிடித்தது.

அந்த வகையில் கடந்த வருடம் வரலாற்றில் முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து அவமானத்தை சந்தித்ததிலிருந்து மிகச் சிறந்த கம்பேக் கொடுத்த மும்பை எலிமினேட்டர் பிளே ஆப் போட்டியில் லக்னோவை பேட்டிங் 81 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதனால் மே 26இல் அகமதாபாத் நகரில் நடைபெறும் குவாலிஃபயர் 2 போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத்தை எதிர்கொள்ள மும்பை தகுதி பெற்றது.

- Advertisement -

நன்றியை மறக்காதீங்க:
முன்னதாக பும்ரா, போல்ட், பாண்டியா சகோதரர்கள், மலிங்கா, பொல்லார்ட் போன்ற முக்கிய வீரர்களை வைத்தே எளிதாக 5 கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மா அவர்கள் இல்லாத காரணத்தால் தடுமாற்றமாக கேப்டன்ஷிப் செய்து கடந்த வருடம் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்ததாக எதிரணி ரசிகர்கள் விமர்சித்தனர். அதை விட மும்பையிலிருந்து வெளியேறிய ஹர்திக் பாண்டியா கடந்த வருடம் குஜராத்தை கேப்டனாக வழி நடத்திய முதல் சீசனிலேயே கோப்பையை வென்று கொடுத்தார்.

அந்த நிலையில் தரமான வீரர்களை ஏலத்தில் வாங்கி வெற்றி நடை போடும் மும்பையை விட எவ்விதமான வீரர்களை வேண்டுமானாலும் வாங்கி அவர்களுக்கு தேவையான சுதந்திரமும் வாய்ப்பையும் கொடுத்து சிறப்பாக செயல்பட வைத்து வெற்றி நடை போடும் தோனி தலைமையிலான சென்னையின் பாதையையே தமது தலைமையிலான குஜராத் பின்பற்றுவதாக கடந்த சில வாரங்களுக்கு முன் ஹர்திக் பாண்டியா வெளிப்படையாக தெரிவித்தார். அதனால் கொந்தளித்த மும்பை ரசிகர்கள் உள்ளூரில் 200, 500 ரூபாய்களுக்கு யாருமே தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்த உங்களையும் உங்களது சகோதரர் க்ருனால் பாண்டியாவையும் 2015இல் வாங்கி வாய்ப்பு கொடுத்து வளர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் அளவுக்கு உதவிய எங்களை நன்றி மறந்து பேசாதீர்கள் என்று பதிலடி கொடுத்தனர்.

- Advertisement -

அவர்கள் கூறியது போல 2015இல் பாண்டியா சகோதரர்கள், பும்ரா மட்டுமன்றி சமீப காலங்களில் சூரியகுமார் யாதவ், இசான் கிசான் போன்ற வீரர்கள் நட்சத்திரங்களாக மும்பை அணியில் இணையவில்லை. மாறாக இளம் வீரர்களாக இணைந்து வளர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலிப்பதற்கு மும்பை அணி நல்ல வாய்ப்பையும் ஆதரவையும் கொடுத்தது என்பதில் சந்தேகமில்லை. அந்த வரிசையில் தற்போது திலக் வர்மா, நேஹல் வதேரா போன்ற இளம் வீரர்கள் வருங்காலத்தில் இந்தியாவுக்கு விளையாடும் அளவுக்கு இந்த சீசனில் மும்பை அணிக்காக சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றனர்.

எனவே மும்பை எப்போதும் நட்சத்திர வீரர்களைக் கொண்ட அணி அல்லது நட்சத்திரங்களை வாங்கும் அணி கிடையாது மாறாக நட்சத்திரங்களை உருவாக்கும் அணி என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார். இருப்பினும் இங்கிருந்து சூப்பர் ஸ்டார்களாக வெளியே சென்றவர்கள் அதை மறந்து விடுவதாக ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க:MI vs LSG : தோல்விக்கான முழுப்பொறுப்பையும் நானே ஏத்துக்குறேன். என் தப்பு தான் – க்ருனால் பாண்டியா வருத்தம்

“உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் பும்ரா, பாண்டியா போன்ற வீரர்கள் கதையும் தற்போதுள்ள வீரர்கள் கதையும் ஒன்று தான். அதே கதை தான் மீண்டும் திலக் வர்மா, நேஹல் வதேரா ஆகியோருக்கும் நடக்கும். ஆனால் மற்றவர்கள் அவர்களை அடுத்த 2 வருடங்களில் பார்த்து விட்டு மும்பை அணியில் முழுக்க முழுக்க சூப்பர் ஸ்டார்கள் இருக்கின்றனர் என்று சொல்வார்கள். இருப்பினும் இந்த வீரர்கள் மும்பையின் பட்டறையில் தீட்டப்படுகிறார்கள். இந்த 2 வீரர்கள் வருங்காலத்தில் எங்களுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கும் சூப்பர் ஸ்டார்களாக உருவெடுப்பார்கள்” என்று கூறினார்.

Advertisement