MI vs LSG : தோல்விக்கான முழுப்பொறுப்பையும் நானே ஏத்துக்குறேன். என் தப்பு தான் – க்ருனால் பாண்டியா வருத்தம்

Krunal Pandya
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி கட்டப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது குவாலிபயர் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணியானது இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள வேளையில் நேற்று மும்பை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான எலிமினேட்டர் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

MI vs LSG

- Advertisement -

இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியானது 81 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி இரண்டாவது குவாலிபயர் போட்டியில் குஜராத் அணியுடன் நாளை விளையாட இருக்கிறது.

நேற்று நடைபெற்ற இந்த எலிமினேட்டர் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவிக்க பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வியை சந்தித்தது.

Krunal Pandya

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் க்ருனால் பாண்டியா கூறுகையில் : இந்த போட்டியின் போது ஒரு கட்டத்தில் நாங்கள் நல்ல நிலையில் தான் இருந்தோம். ஆனால் அனைத்துமே இறுதியில் தவறாக சென்று முடிந்து விட்டது. நாங்கள் இன்னும் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக நான் ஆட்டம் இழந்தது ஒரு தவறான ஷாட்.

- Advertisement -

இதையும் படிங்க : IPL 2023 : அந்த டீம பாத்து எனக்கு ரொம்ப பயம், அவங்க ஃபைனலுக்கு வந்தா சிஎஸ்கே ஜெயிக்காது – ப்ராவோ கவலையுடன் பேட்டி

இந்த போட்டியின் தோல்விக்கு முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். பந்து நன்றாக பேட்டுக்கு வந்தும் எங்களால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியவில்லை. இந்த போட்டியில் பேட்டிங்கில் நல்ல கிரிக்கெட்டை விளையாடி இருந்தால் நிச்சயம் நாங்கள் வெற்றி பெற்றிருக்க முடியும். இந்த சென்னை மைதானத்தில் மேயர்ஸ் நல்ல ரெகார்ட் வைத்திருப்பதாலே டீ காக்கிற்கு பதிலாக அவரை தேர்வு செய்தோம் என க்ருனால் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement