தோனியை ஆலோசகராக நியமித்தது இதற்காகத்தான் – சவுரவ் கங்குலி கொடுத்த விளக்கம்

Ganguly
- Advertisement -

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது அணியின் ஆலோசகராக மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியிலும் பெரிய அளவில் பேசு பொருளாக மாறியது. ஏனெனில் இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருக்கையில் அணியின் ஆலோசகராக தோனியை நியமிக்க காரணம் என்ன என்ற கேள்விகள் அதிகளவில் எழுந்துள்ளன.

Dhoni-1

- Advertisement -

மேலும் தோனி அணியின் ஆலோசகராக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் குறித்த செய்திகளும், அவரது இந்த பதவி குறித்த செய்திகளுமே அதிக அளவில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் பிசிசிஐ-யின் தலைவரான சவுரவ் கங்குலி தோனியின் இந்த புதிய பதவி குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் வாக் 2019 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் அணியின் ஆலோசகராக செயல்பட்டார். அது ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் அனுகூலமாக அமைந்தது. மேலும் இங்கிலாந்தில் நடந்த அந்த தொடரை ஆஸ்திரேலியா சமன் செய்யவும் அவரின் அந்த புதிய பதவி காரணமாக அமைந்தது. அதேபோன்றுதான் தோனியின் இந்த பதவியும், தோனியின் அனுபவமும் நிச்சயம் இந்திய அணிக்கு ஒரு கூடுதல் அனுகூலமாக இருக்கும்.

Dhoni

அது மட்டுமின்றி இந்திய அணிக்கு சற்று உதவிசெய்யும் வகையாக அவரது இந்த ஆலோசகர் பதவி இருக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : உலகக் கோப்பையை வெல்ல மட்டுமல்ல அவரால் நிச்சயம் இந்திய அணிக்கு பெரிய அளவில் பங்காற்ற முடியும். ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் அதிக அனுபவம் உடையவர்.

இந்திய அணிக்கு நிச்சயம் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவார். 2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஐசிசி தொடரை வெல்லாமல் இருக்கும் இந்திய அணிக்கு அவருடைய ஆலோசனைகள் கண்டிப்பாக உதவும் என்றும் அதனால் அவரை ஆலோசகராக நியமித்ததாக கங்குலி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement