
இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியினை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் இருந்தனர்.
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த ஜூலை 10-ஆம் தேதி துவங்கி நேற்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அசத்தியது.
இதன்மூலம் இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து அசத்திய இங்கிலாந்து அணி தற்போதைய நிலையில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் இலக்கிற்கு வெகு அருகில் வந்து இந்திய அணி தோல்வியை தழுவியது பலரது மத்தியிலும் வருத்தத்தை அளித்துள்ளது.
இருந்தாலும் இந்திய அணி இந்த போட்டியில் போராடிய விதம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. மேலும் இந்த லார்ட்ஸ் போட்டியில் அடைந்த தோல்விக்கு பின்னர் பல்வேறு முன்னாள் வீரர்களும் இந்திய அணியின் இந்த சிறப்பான போராட்டம் குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலியும் தனது சமூக வலைதள பக்கத்தில் சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் சவுரவ் கங்குலி குறிப்பிட்டதாவது : என்ன ஒரு டெஸ்ட் மேட்ச். இந்தியா இந்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இறுதியில் சென்று தோல்வியை சந்தித்துள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனாலும் கடந்த மூன்று போட்டிகளாகவே இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. ரவீந்திர ஜடேஜா கடைசி வரை சிறப்பாக போராடினார்.
இதையும் படிங்க : அவங்க 3 பேரும் முடிஞ்ச அளவு போராடுனாங்க.. லார்ட்ஸ் தோல்விக்கு ஆறுதல் கூறிய – சச்சின் டெண்டுல்கர்
193 ரன்கள் என்பது பெரிய இலக்காக இல்லை என்றாலும் இதுதான் டெஸ்ட் போட்டி என்று அவர் இந்திய அணியை ஆசுவாசப்படுத்தும் வகையில் சில கருத்துக்களை சவுரவ் கங்குலி பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் நடைபெறவுள்ளது.