ஐபிஎல் 2022 பைனலில் ஏஆர் ரஹ்மான் கலந்து கொள்வார் – கங்குலி அறிவிப்பு ! எதற்காக தெரியுமா?

Ganguly
Advertisement

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாகத் துவங்கியது. கடந்த 2008இல் 8 அணிகளுடன் சாதாரண டி20 தொடராக தொடங்கப்பட்ட இந்த தொடர் ஒவ்வொரு வருடமும் தன்னைத்தானே மெருகேற்றி கொண்டு தரத்திலும் பணத்திலும் பன்மடங்கு உயர்ந்து இன்று உலக கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் உலகின் நம்பர் ஒன் டி20 உருவெடுத்துள்ளது. இந்த வருடம் லக்னோ 7000+ கோடி மற்றும் 5000+ கோடி என்ற பிரம்மாண்ட தொகைகளில் உருவாக்கப்பட்ட புதிய 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் வழக்கமான 60 போட்டிகளுக்கு பதிலாக 74 போட்டிகள் கொண்ட 10 அணிகள் பங்குபெறும் பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் மும்பை நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

IPL 2022

இதில் மும்பை, புனே ஆகிய நகரங்களில் மட்டும் நடைபெற்று வரும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று உச்சகட்டத்தை எட்டி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வருடத்தைப் போல இந்த வருடமும் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று பரபரப்பான திரில்லர் தருணங்களுடன் ரசிகர்களை துள்ளி குதித்து மகிழ்ச்சியடைய வைத்து வருகிறது.

- Advertisement -

பிளே ஆஃப்:
இருப்பினும் இந்த தொடரில் யாருமே எதிர்பாராத வகையில் நிறைய கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் என பெயரெடுத்த மும்பையும் சென்னையும் தொடர் தோல்விகளால் லீக் சுற்றுடன் வெளியேறியது உறுதியாகியுள்ளது. ஆனால் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய புதிய அணிகள் தொடர் வெற்றிகளால் முதல் சீசனிலையே பிளே ஆப் சுற்றுக்கு சென்று ரசிகர்களுக்கு ட்விஸ்ட் வைத்துள்ளன. அதில் கேப்டன்ஷிப் அனுபவம் சுத்தமாக இல்லாத போதிலும் ஒவ்வொரு போட்டியிலும் சொல்லி அடித்த ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் 9 வெற்றிகளுடன் முதல் அணியாக அதிகாரப்பூர்வமாக நாக் – அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

gt

எனவே எஞ்சிய 3 இடங்களுக்கு சென்னை, மும்பை தவிர எஞ்சிய 7 அணிகள் கடும் போட்டியிட்டு வருகின்றன. அந்த வகையில் வரும் மே 22-ஆம் தேதியுடன் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று முடிவுக்கு வருகிறது. அதை தொடர்ந்து மே 24-ஆம் தேதி துவங்கும் முக்கியமான நாக் – அவுட் சுற்று போட்டிகளுக்கு பின்பு வரும் மே 29-ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டியுடன் ஐபிஎல் 2022 தொடர் நிறைவுக்கு வருகிறது.

- Advertisement -

நட்சத்திர கலைவிழா:
அதில் வரும் மே 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் குவாலிபயர் 1 மற்றும் எலிமினேட்டர் ஆகிய பிளே-ஆப் சுற்று போட்டிகள் உலகப் புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மே 27-இல் நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியும் மே 29-ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியும் குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மே 29-ஆம் தேதி நிறைவுக்கு வரும் ஐபிஎல் 2022 தொடருக்கு சிறப்பான நிறைவு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அறிவித்துள்ளார்.

Ipl opening

பொதுவாக ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு வருடமும் தொடங்கும்போது துவக்க விழாவும் முடியும்போது நிறைவு விழாவும் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக கரோனா காரணமாக அதற்கு செலவிடப்படும் தொகையை மருத்துவ செலவுகளுக்காக பிசிசிஐ நன்கொடையாக வழங்கி வந்தது. இந்த வருடம் கூட அதே காரணத்துக்காக துவக்கவிழா நடைபெறாத நிலையில் தற்போது இந்தியாவில் நிலைமை சீராக மாறியுள்ளதால் நிறைவு விழா நடத்தப்பட உள்ளதாக கங்குலி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஏஆர் ரஹ்மான்:
அந்த விழாவில் இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் அந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் ஆஸ்கர் நாயகன் மற்றும் தமிழகத்தின் நட்சத்திரம் ஏஆர் ரகுமான், பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் போன்ற நட்சத்திரங்கள் பங்குபெற உள்ளதாகவும் அவர் உறுதி செய்துள்ளார்.

Ganguly

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அஹமதாபாத் நகரில் இறுதிப் போட்டி நடைபெறும் நிலையில் அதில் நம் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் இந்திய கிரிக்கெட்டின் பயணத்தை பற்றிய சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்” என்று கூறினார்.

இதையும் படிங்க : அவ்ளோ சீக்கிரமா அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு குடுக்க கூடாது – எம்.எஸ்.கே பிரசாத் ஓபன்டாக்

அந்த நிகழ்ச்சியிலும் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் ப்ளே ஆப் போட்டிகளிலும் ஒருசில முன்னாள் கேப்டன்களை கவுரவிக்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement