அவ்ளோ சீக்கிரமா அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு குடுக்க கூடாது – எம்.எஸ்.கே பிரசாத் ஓபன்டாக்

Prasad
- Advertisement -

ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பல திறமையான இளம் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது மட்டுமின்றி தேர்வாளர்களின் கவனத்தையும் ஈர்த்து இந்திய அணியில் இடம் பிடித்து வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே இடம்பிடித்த பல இளம் வீரர்கள் தற்போது இந்திய அணிக்காக விளையாடி வரும் வேளையில் இந்த ஆண்டு மொத்தமாக 10 அணிகளுடன் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலும் சில இளம் வீரர்கள் தங்களது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர்களுக்கு இந்திய அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்கிற அளவிற்கு பேச்சுகள் எழுந்து வருகிறது.

PBKS vs SRH

- Advertisement -

அந்த வகையில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வரும் இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் இந்த ஆண்டு தனது அதிவேகமான பந்துவீச்சின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஒருபுறம் இவருக்கு இந்திய அணியில் சீக்கிரம் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று பலரும் கூறி வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் தலைமை தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே பிரசாத் மாலிக்கிற்கு இந்திய அணியில் இடம் வழங்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் : உம்ரான் மாலிக் சிறப்பாகத்தான் பந்து வீசுகிறார். மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. இருப்பினும் பெரிய அளவு அனுபவம் இல்லாத ஒரு இளம் வீரரை சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாட வைப்பது தவறு.

Umran Malik Pace

முதலில் நாம் அவரை சரியாக பயிற்றுவிக்க வேண்டும். அவரை பயிற்றுவிக்க வேண்டுமெனில் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டிலும், உள்ளூர் போட்டிகள் மற்றும் இந்திய ஏ அணிக்கும் அவரை நிறைய போட்டிகளில் விளையாட வைக்க வேண்டும். அவ்வாறு நிறைய போட்டிகளை அவர் விளையாடும் பட்சத்தில் நல்ல பயிற்சி மற்றும் தன்னம்பிக்கை அவருக்கு கிடைக்கும்.

- Advertisement -

இப்படி முறையான அனுபவம் கிடைத்தால் மட்டுமே அவரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும். அப்படி அவர் இந்திய அணியில் இணையும் பட்சத்தில் அவருடைய அனுபவம் அவருக்கு கை கொடுக்கும். ஏற்கனவே உள்ளூர் கிரிக்கெட்டில் சிராஜ் சிறப்பாக செயல்பட்டதால் தான் தற்போது இந்திய அணியில் எந்த வித அழுத்தமும் இன்றி சர்வதேச பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

இதையும் படிங்க : ஜடேஜாவுக்கும் அதுக்கும் என்ன சம்மந்தம். சி.எஸ்.கே நிர்வாகத்தினை விளாசிய – ரவி சாஸ்திரி

அந்த வகையில் உம்ரான் மாலிக்கும் நிறைய உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி அனுபவம் பெற்ற பின்னர்தான் இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என எம்.எஸ்.கே பிரசாத் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement