ஜடேஜாவுக்கும் அதுக்கும் என்ன சம்மந்தம். சி.எஸ்.கே நிர்வாகத்தினை விளாசிய – ரவி சாஸ்திரி

Shastri
- Advertisement -

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 15 ஆவது ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு சில தினங்களுக்கு முன்னதாக சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கேப்டன் பதவியில் இருந்து வெளியேறினார். அதன்காரணமாக புதிய கேப்டனாக சிஎஸ்கே அணியின் நிர்வாகம் ஜடேஜாவை தேர்வு செய்து அவரை கேப்டனாகவும் மாற்றியது. ஆனால் ஜடேஜாவின் தலைமையில் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணிக்கு துவக்கத்திலிருந்தே சரமாரியான அடி விழுந்தது என்றே கூறவேண்டும்.

Jadeja

ஏனெனில் முதல் 8 போட்டிகளில் விளையாடிய சென்னை அணியானது வெறும் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றது. இதன் காரணமாக கடுமையான அழுத்தத்திற்கு சி.எஸ்.கே அணி சென்றதனால் தனது கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா வெளியேறினார். மேலும் கேப்டன் பதவியில் உள்ள அழுத்தம் காரணமாக தனது தனிப்பட்ட ஆட்டம் பாதிக்கப்படுகிறது என்று கூறி இனி தனிப்பட்ட ஆட்டத்தில் கவனம் செலுத்தவே கேப்டன் பதவியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்திருந்தார்.

- Advertisement -

அதோடு ஜடேஜாவை ஒரு சிறப்பான ஆல்-ரவுண்டராக பார்க்க வேண்டும் என்பதற்காக மீண்டும் தோனி கேப்டன் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். இப்படி தோனி மீண்டும் கேப்டனாக திரும்பியதில் இருந்து சென்னை அணி இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது. இதன் காரணமாக தற்போது சென்னை அணி செய்த தவறே ஜடேஜாவை கேப்டனாக மாற்றியதுதான் தோனியே தொடர்ச்சியாக கேப்டனாக நீடித்திருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் சென்னை அணிக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Jadeja

அந்த வகையில் ஜடேஜாவை கேப்டனாக மாற்றியது தவறு என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஜடேஜா இயற்கையாகவே கேப்டன்சி செய்யும் திறன் பெற்றவர் கிடையாது. அவர் ஒரு மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் அவரது ஆட்டத்தினை இயல்பாக விளையாட வைத்திருக்க வேண்டும். ஒரு போட்டியில் கூட கேப்டன்சி செய்யாத அவருக்கு கேப்டன் பதவி கொடுத்தது கடினமான ஒன்று.

- Advertisement -

கேப்டனாக சிறப்பாக செயல்படுவார் என்று கூறி நீங்களே அவருக்கு அழுத்தத்தைக் கொடுத்து விட்டீர்கள் என்று சி.எஸ்.கே அணி நிர்வாகத்தை சாடியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஜடேஜா அவரது இயல்பான ஆட்டத்தை விளையாடி இருந்தாலே மூன்று துறைகளிலும் சென்னை அணிக்காக அற்புதமான பங்களிப்பை வழங்கி இருக்க முடியும். ஆனால் அவருக்கு கூடுதல் அழுத்தத்தைக் கொடுத்து தற்போது அவர் பார்ம் அவுட் ஆகியுள்ளார்.

இதையும் படிங்க : பார்மின்றி தவித்த எனக்கு புஜாரா தான் ஹெல்ப் பண்ணாரு – வெளிப்படையாக பேசிய பாகிஸ்தான் வீரர்

ஒரு அணியின் கேப்டன் என்பவர் அணியில் உள்ள சூழ்நிலையை புரிந்துகொண்டு வீரர்களுடன் சரியான புரிந்துணர்வு கொண்டு இக்கட்டான சூழலிலும் நல்ல முடிவை எடுக்க தெரிந்தவரே நல்ல கேப்டனாக மாற முடியும் என்று ரவிசாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement