- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆஸியில் சொதப்பிய ரோஹித், கோலி சாம்பியன்ஸ் ட்ராபியில் அசத்துவாரு.. காரணம் இது தான்.. கங்குலி ஆதரவு

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா மிகப்பெரிய அனுபவத்தைக் கொண்டுள்ளார்கள். இருப்பினும் சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடர்களில் அவர்கள் சுமாராக விளையாடியது இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

அதன் காரணமாக விமர்சனங்களை சந்தித்த அவர்கள் ரஞ்சிக் கோப்பையில் பல வருடங்கள் கழித்து விளையாடினார்கள். ஆனால் அந்த வாய்ப்பிலும் அரை சதம் கூட அடிக்காத விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தார்கள். அப்படிப்பட்ட அவர்களை வைத்து இந்தியா எப்படி 2025 சாம்பியன்ஸ் டிராபியை வெல்லப் போகிறது என்ற கவலை ஒரு பக்கம் ரசிகர்களுக்கு இருக்கிறது.

- Advertisement -

கங்குலி ஆதரவு:

இந்நிலையில் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் சிறப்பாக விளையாடுவார்கள் என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். மேலும் செமி ஃபைனலுக்கு தகுதி பெறும் 4 அணிகளையும் அவர் ஒரு மனதாக கணித்துள்ளார். அதற்கான காரணங்கள் பற்றி சமீபத்திய பேட்டியில் 2002 சாம்பியன்ஸ் ட்ராபியை கேப்டனாக வென்று சாதனை படைத்த கங்குலி பேசியது பின்வருமாறு.

“வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விராட் கோலி, ரோஹித் சர்மா பெரிய கிரிக்கெட்டர்கள். சாம்பியன்ஸ் டிராபியில் குறிப்பாக துபாயில் பிட்ச்கள் நன்றாக இருக்கும் என்று நாம் நம்பலாம். கடந்த சில வெள்ளைப் பந்து உலகக் கோப்பைகளில் அவர்கள் மிகவும் சிறப்பாக விளையாடியுள்ளார்கள். எனவே விராட் கோலி, ரோஹித் சர்மா நன்றாக செயல்படுவார்கள்”

- Advertisement -

செமி ஃபைனல் அணிகள்:

“அடுத்து நடைபெறும் இங்கிலாந்து தொடரிலும் அவர்கள் நன்றாக விளையாடுவார்கள். ஆஸ்திரேலியாவில் வேண்டுமானால் அவர்கள் நன்றாக விளையாடாமல் இருந்திருக்கலாம். ஆனால் அடுத்து வரும் தொடர்களில் அவர்கள் நன்றாக விளையாடுவார்கள். இந்தியா கடந்த டி20 உலகக் கோப்பையை வென்று 2023 உலகக் கோப்பை ஃபைனல் வரை சென்றது. எனவே சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் ஒரு அணியாக இந்தியா இருக்கும்”

இதையும் படிங்க: கங்குலி மொத்தமா சேந்து இங்கிலாந்தை தெறிக்க விடலாம்ன்னு சொன்னதை சச்சின் தடுத்துட்டாரு.. ராஜிவ் சுக்லா

“இருப்பினும் அதற்கு இந்தியா தங்களுடைய திட்டங்களை எவ்வாறு செயல்படுத்துகிறது என்பது முக்கியம். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்தியா மிகவும் நல்ல அணி. செமி ஃபைனலில் விளையாடப் போகும் அணிகளை சொல்வது கடினம் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற அனைத்து அணிகளும் வலுவானது. இந்திய துணைக் கண்டத்தில் பாகிஸ்தானும் வலுவான அணியாகும். எனவே அந்த நேரத்தில் யார் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்பதை பொருத்து வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்கள்” எனக் கூறினார்.

- Advertisement -