சுதந்திரதின ஸ்பெஷல் : கங்குலி தலைமையிலான இந்திய அணி – மாஸ் போட்டியின் முழுவிவரம் இதோ

Ganguly
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஆரம்ப காலங்களில் கத்துக்குட்டி அணியான ரொம்பவே தடுமாறிய இந்தியா 1983இல் கபில்தேவ் தலைமையில் முதல் முறையாக உலக கோப்பையை வென்றபோது மிகப்பெரிய மறுமலர்ச்சியை கண்டது. ஏனெனில் அதன்பின் கபில் தேவ், சவுரவ் கங்குலி, எம்எஸ் தோனி போன்ற மகத்தான கேப்டன்களின் தலைமையில் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற ஏராளமான உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் உருவாகி சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து இந்தியாவின் கொடி பட்டொளி வீசி பறக்க விட்டு முக்கிய காரணமாக உருவானார்கள்.

அதனால் இன்று உலக அரங்கில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுடன் போட்டி போடும் அளவுக்கு மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ள இந்தியாவுக்கு காலங்காலமாக தங்களது திறமையால் தூண்களாக நின்று சரித்திர வெற்றிகளைப் பெற உதவிய நட்சத்திர வீரர்கள் ஒரு கட்டத்தில் வயது காரணமாக ஓய்வு பெற்று விட்டார்கள். அதனால் என்னதான் தற்போது சூப்பர் ஸ்டார் வீரர்கள் விளையாடும் அதிரடியான டி20 போட்டிகளை பார்த்தாலும் தாங்கள் பார்த்து வளர்ந்து ஹீரோக்களாக கொண்டாடிய கிரிக்கெட் வீரர்களின் ஆட்டத்தை பார்க்க முடியாத நிலைமை ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சுதந்திரதின ஸ்பெஷல்:
அதுபோன்ற ரசிகர்களின் தாகத்தை தணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது தான் லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட்டாகும். ஆம் ஓய்வு பெற்ற வீரர்கள் இணைந்து மீண்டும் விளையாட வழிவகை செய்யும் இந்த தொடரின் முதல் சீசன் கடந்த வருடம் துபாயில் நடைபெற்றது. அதில் இந்திய மகாராஜாஸ், ஆசிய லயன்ஸ், வேர்ல்ட் ஜெய்ன்ட்ஸ் ஆகிய 3 அணிகளில் உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான ஜாம்பவான்கள் விளையாடியது அனைத்து நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களின் மனதைக் கவர்ந்தது.

கடந்த வருடம் இர்பான் பதான், பிரட் லீ, ஷாஹித் அப்ரிடி என ஏராளமான ஜாம்பவான் வீரர்கள் பங்கேற்றதால் மிகப்பெரிய வெற்றியடைந்த அந்த தொடரில் ஆசிய அணியை தோற்கடித்த உலக அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதனால் இம்முறை வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் போன்ற மேலும் சில இந்திய முன்னாள் வீரர்களை விளையாட வைக்க அதன் நிர்வாகம் திட்டமிட்டது. அதைவிட இந்த வருடம் இந்தியா தனது 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதால் அது சம்பந்தமாக நிதி திரட்டும் போட்டியில் முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி விளையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

அதை உடற்பயிற்சிக்கு சென்று பயிற்சிகளை துவங்கி புகைப்படமாக பதிவிட்டிருந்த சவுரவ் கங்குலி உறுதி செய்திருந்தால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறிய நிலையில் இந்த தொடரின் 2வது சீசன் வரும் செப்டம்பர் 16ஆம் தேதியன்று துவங்கும் என்று அதன் கமிஷனர் ரவி சாஸ்திரி அறிவித்துள்ளார். அதிலும் செப்டம்பர் 16ஆம் தேதியன்று உலகப்புகழ் பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கும் இந்திய மஹாராஜாஸ் மற்றும் உலக ஜெய்ன்ட்ஸ் அணிகள் மோதும் முதல் போட்டி 75வது இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் இந்தியாவுக்கு அர்ப்பணிக்க படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கங்குலி கேப்டன்:
அந்த போட்டிக்கு இந்திய ஜாம்பவான் சௌரவ் கங்குலி கேப்டனாக செயல்படுவார் என்றும் அதை எதிர்த்து விளையாடும் உலக அணிக்கு 2019 உலகக்கோப்பையை வென்று கொடுத்த இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் கேப்டனாக செயல்பட உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மொத்தம் 4 அணிகள் பங்குபெறும் இந்த தொடர் 22 நாட்கள் இந்தியாவில் உள்ள 6 வெவ்வேறு நகரங்களில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு அட்டவணை விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா – உலக அணிகள் மோதும் அணிகளில் இடம் பெற்றுள்ள ஜாம்பவான் வீரர்களின் பட்டியல் இதோ:

இந்திய மஹாராஜாஸ்: சவுரவ் கங்குலி (கேப்டன்), வீரேந்திர சேவாக், முகமது கைஃப், யூசுப் பதான், சுப்ரமணியம் பத்ரிநாத், இர்பான் பதான், பார்த்தீவ் பட்டேல், ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரீசாந்த், ஹர்பஜன்சிங், நமன் ஓஜா, அசோக் திண்டா, பிரக்யன் ஓஜா, அஜய் ஜடேஜா, ஆர்பி சிங், ஜோஹிந்தர் சர்மா, ரீடிண்டர் சோதி

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டில் பிராவோ படைத்த இமாலய சாதனை. வேறலெவல் தான் – குவியும் பாராட்டு

உலக ஜெய்ன்ட்ஸ்: இயன் மோர்கன் (கேப்டன்), லெண்டில் சிம்மன்ஸ், ஹெர்ஷல் கிப்ஸ், ஜாக் காலிஸ், சனத் ஜெயசூர்யா, மாட் பிரியர், நேதன் மக்கலம், ஜான்டி ரோட்ஸ், முத்தையா முரளிதரன், டேல் ஸ்டெயின், ஹமில்டன் மசகட்சா, மாஷ்ரஃபி மோர்டேசா, ஆஸ்கர் ஆப்கன், மிட்செல் ஜான்சன், பிரட் கீ, தினேஷ் ராம்டின்

Advertisement