உடற்பயிற்சி செய்யும் போது ஏற்பட்ட நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கங்குலி – விவரம் இதோ

Ganguly (2)

இந்திய அணியின் முன்னாள் வீரரும், பிசிசிஐயின் தலைவருமான கங்குலி தனது ஆளுமையில் மட்டுமின்றி கிரிக்கெட்டிலும் பல அதிரடிகளை நிகழ்த்தியவர். 48 வயதான கங்குலிக்கு இந்தியா முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் என்றால் அது மிகை அல்ல. அந்த அளவிற்கு தனது ஆட்டத்திலும் தனது கேப்டன் தலைமைப்பண்பினாலும் அவர் இந்திய அணியின் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். மேலும் 2012ஆம் ஆண்டில் இருந்து அனைத்துவகையான கிரிக்கெட்டிலிருந்து விளையாடாமல் இருக்கும் கங்குலி தற்போது பிசிசிஐ நிர்வாக உறுப்பினர்களுடன் சமீபத்தில் பயிற்சி போட்டியில் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்வித்தார்.

Ganguly

இந்நிலையில் தற்போது திடீரென்று அவருக்கு உடற்பயிற்சி செய்யும்போது நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக ரசிகர்கள் பெரும் வருத்தத்திற்கு ஆளானார்கள். மேலும் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் வசிக்கும் கங்குலி அவரது வீட்டில் உடற்பயிற்சி செய்யும் போது நெஞ்சு வலி ஏற்பட்டதால் உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்தியா டுடே பத்திரிக்கையில் வெளியான செய்தியில் ” சவுரவ் கங்குலி தனது வீட்டில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சு வலியால் துடித்ததாகவும் அதனால் உடனடியாக அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்” என்றும் அதிகாரப்பூர்வமாக தகவலை அந்த பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Ganguly 1

மேலும் அவருக்கு ஆஸ்பத்திரியில் எந்த வகையான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்தும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். அதில் கங்குலிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி என்ற சிகிச்சை செய்த பின்னர் தற்போது அவர் மருத்துவமனையில் உடல்நலத்துடன் சீராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் விரைவில் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

- Advertisement -

Ganguly

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி கங்குலி தன்னுடன் பேசியதாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்த ஆஸ்பத்திரிக்கும் மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்து அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.