- Advertisement -
இந்திய கிரிக்கெட்

முகமது ஷமி கிட்ட கண்டிப்பா அதற்கான காரணத்தை சொல்லணும்.. ஷமியின் நீக்கம் குறித்து – கங்குலி பேச்சு

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது வரும் நவம்பர் 14-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நவம்பர் 14-ஆம் தேதி துவங்குகிறது. இதன் காரணமாக தற்போது இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் கொல்கத்தா நகருக்கு சென்றடைந்து தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

முகமது ஷமியின் நீக்கம் குறித்து : சவுரவ் கங்குலி பேச்சு

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது அந்த அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது பலரது மத்தியிலும் விவாதத்தை எழுப்பி உள்ளது. ஏனெனில் கடைசியாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய முகமது ஷமி அதன்பிறகு காயத்தை காரணம் காட்டி தொடர்ச்சியாக இந்திய அணியில் இருந்து நிராகரிக்கப்பட்டு வருகிறார்.

- Advertisement -

மேலும் அவரது தேர்வு குறித்து பேசியிருந்த அஜித் அகார்கரும் முகமது ஷமியின் உடற்பகுதி குறித்த முழுவிவரம் எங்களுக்கு கிடைக்கவில்லை என்பதனால் அவரை நீக்கியுள்ளோம் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் முகமது ஷமி ஏற்கனவே காயத்தில் இருந்து வெளியேறி ரஞ்சி போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 போட்டிகளில் 15 விக்கெட்டை எடுத்து அசத்தியிருந்தார்.

அதன் காரணமாக மீண்டும் அவர் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவ்வேளையில் தென்னாப்பிரிக்க தொடரிலும் முகமது ஷமியின் வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி கூறுகையில் : முகமது ஷமி தற்போது மிகச் சிறப்பான உடற்தகுதியுடன் பந்துவீசி வருகிறார்.

- Advertisement -

ரஞ்சி கோப்பையில் அவர் விளையாடிய விதத்தை நாம் பார்த்தாலே அவர் பிட்டாக இருப்பது தெரிந்திருக்கும். பெங்கால் அணிக்காக தனி ஒரு நபராக நின்று வெற்றியை தேடித்தந்துள்ளார். இந்திய அணியின் தேர்வுக்குழுவினர் அவரை கண்டிப்பாக கவனித்து வருவார்கள் என்று நினைக்கிறேன். ஆனாலும் அவர் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்று எனக்கு புரியவில்லை.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியின் டீலை நிராகரித்த குஜராத் டைட்டன்ஸ்.. வாஷிங்டன் சுந்தர் டிரேடிங்கில் – ஏற்பட்டுள்ள திருப்பம்

இருந்தாலும் அவரது நீக்கம் குறித்த தெளிவான தகவலை அவருக்கு கண்டிப்பாக தெரிவித்திருக்க வேண்டும். என்னை பொறுத்தவரை முகமது ஷமியின் உடற்தகுதி மற்றும் திறமை ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது நிச்சயமாக நான் முகமது ஷமியை இந்திய அணிக்கு தேர்வு செய்திருப்பேன் என கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -