தொட்டாலே சிக்ஸருக்கு பறக்கும் ஆக்லாந்து மைதானம் பற்றிய அறிய தகவல். காரணம் இதுதான் – விவரம் இதோ

Eden-park
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டி கொண்ட தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 203 ரன்கள் அடித்தாலும் இந்திய அணி எளிதில் சேசிங் செய்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

IndvsNz

- Advertisement -

இந்நிலையில் ஆக்லாந்து மைதானம் குறித்த தகவலை இந்த பதிவில் பார்க்கலாம். கடந்த போட்டியை பார்த்தாலே தெரியும் எந்த ஒரு பேட்ஸ்மேனும் எளிதாக சிக்ஸ் அடிக்கும்படி இந்த மைதானம் உள்ளது. ஆக்லாந்து மைதானம் 41 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய அளவிலான ஒரு சிறிய மைதானம் இந்த மைதானத்தின் பெயர் “ஈடன் பார்க்” இந்த மைதானத்தில் கிரிக்கெட் மட்டுமின்றி ரக்பி விளையாடவும் இதனை பயன்படுத்தி வருகிறார்கள்.

1900 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியை 1930 ஆம் ஆண்டு நடத்தியது. அதனை தொடர்ந்து கடந்த 90 வருடங்களாக பாரம்பரிய மைதானமாக பார்க்கப்படும் இந்த மைதானத்தில் பவுண்டரி அளவுகளை இவர்கள் மாற்றியமைக்கவில்லை காரணம் அதன் கட்டமைப்பு அந்த சமயத்தில் இருந்தே அப்படியே இருந்து வந்தது. மேலும் வருடங்கள் கடக்க அதன் தோரணை மாறியது. ஆனால் பவுண்டரி அளவுகள் மாறவில்லை. இந்த மைதானத்தில் அதிகபட்ச எல்லைகோட்டின் தூரமே 65 மீட்டர் தான்.

ஒரு சில இடங்களில் தூரம் மிகவும் குறைவு. அதாவது ஸ்ட்ரெய்ட் பவுண்டரிகளின் எல்லை மிகவும் அருகில் உள்ளது. எனவே தான் பேட்ஸ்மேன்கள் வேகமாக வரும் பந்துகளை சரியாக பேட்டில் தொட்டாலே பந்து சிக்சருக்கு பறக்கிறது. இந்த மைதானம் எப்பொழுதுமே அதிக ரன்களை கொடுக்கும் ஒரு பேட்டிங் சாதகமான மைதானம் ஆகவே பார்க்கப்படுகிறது.

இந்த மைதானத்தில் 2005 ஆம் ஆண்டு முதல் டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இதுவரை இங்கு ஒரு டி20 சதமே அடிக்கப்பட்டுள்ளது. அதுவும் நியூசிலாந்து அணி சார்பில் குப்தில் மட்டுமே இந்த மைதானத்தில் சதம் அடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement