விஜய் மல்லையாவுடன் கோலி. சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்..

- Advertisement -

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கப்பதற்க்கு முன்பாக இங்கிலாந்து உள்ளூர் அணியுடனான பயிற்சி டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியின் போது விராட் கோலி எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது.

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் விராட் கோலி இசை கலைஞர்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளதை கண்ட ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் அந்த புகைப்படத்தில் விராட் கோலியுடன் பண மோசடி வழக்கில் ஈடுபட்ட கிங் பிசர் நிறுவனத்தின் நிர்வாகியும், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் உரிமையாளருமான விஜய் மல்லையாவும் இருந்தார்.

- Advertisement -

கடந்த 2016 ஆம் ஆண்டு மல்லையா மீது 9000 கோடி பண மோசடி, வங்கியில் இருந்து கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் இருப்பது போன்ற பல்வேறு குற்றத்திற்காக வழக்கபதிவி செய்யப்பட்டது. இதனால் அவர் இந்தியாவில் இருந்து தலைமறைவானார். மேலும், லண்டனில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரின் பாஸ்போர்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 5 கோடி ரூபாயை கொடுத்து நிபந்தனை ஜாமின் பெற்று லண்டனில் ஹாயாக சுற்றி வருகிறார். தற்போது மோசடி குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபருடன் இந்திய கிரிக்கெட் அணியின் கோலி இருப்பதை கண்டு கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். அதுவும் இந்த புகைப்படத்தை இந்திய கிரிக்கெட் வாரியமே பதிவிட்டுள்ளது என்பது தான் மேலும் ஒரு ஆச்சர்யமான விடயம்.

Advertisement